பாஜகவுக்கு 1 வாக்கு அளித்தால் 2 வாக்குகள் பதிவாகிறதா? கேரள மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி புகார்!

கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவின்போது, பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் பதிவானதாக குற்றச்சாட்டு எழுந்தது தொடர்பாக விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
உச்ச நீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்ட்விட்டர்

கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவின்போது முறைகேடு?

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் ஜனநாயக திருவிழாவின் முதற்கட்ட வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொடங்க உள்ளது. அண்டை மாநிலமான கேரளத்தில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் சில இடங்களில் மட்டும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். அந்தவகையில், கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் நேற்று (ஏப்ரல் 17) மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்டத் தேர்தல் அதிகாரி இன்பசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த மாதிரி வாக்குப்பதிவின்போது, மின்னணு இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள சின்னங்களுக்கு விழும் வாக்குகள் ஆராயப்பட்டன. இந்த ஆய்வு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

வாக்குகள் பாஜகவுக்கு விழுந்ததாகக் குற்றச்சாட்டு

அப்போது பாஜகவுக்கு 1 வாக்கு அளித்தால், 2 வாக்குகள் பதிவாவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராஜ்மோகன் உன்னி ஆகியோர் குற்றம்சாட்டினர். 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் 4 இயந்திரங்களில் இந்தப் பிரச்னை இருந்ததாக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டினர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள நோட்டா உட்பட 10 பொத்தான்களையும் ஒவ்வொரு முறை அழுத்தியபோதும், விவிபாட் இயந்திரத்தில் பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் பதிவானதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கெனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்படுகிறது. அதன்மூலம் முறைகேடுகள் நடைபெறலாம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், அதற்கு உதாரணமாய் இந்தச் சம்பவம் அரங்கேறியிருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இதையும் படிக்க: ’மோடி அலை இல்லை’.. பாஜக வேட்பாளரின் பேச்சை வரவேற்ற எதிர்க்கட்சிகள்.. பதிலளித்த கருணாஸ் பட நடிகை!

உச்ச நீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டை சரி பார்க்க கோரிய வழக்கு; EC-க்கு புதிய உத்தரவு

மின்னணு வாக்குப்பதிவு தொடர்பான வழக்கு விசாரணை

இந்த நிலையில், ’தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும். 100% எல்லா வாக்குகளையும் ஒப்பிட்டுச் சரிபார்த்த பின்பே முடிவுகளை அறிவிக்க வேண்டும்’ உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு, இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மனு, இன்று (ஏப்ரல் 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

evm machine
evm machinept web

கேரளாவில் நடைபெற்ற முறைகேடு குறித்து வாதம்

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “கேரளா மாநிலம் காசர்கோடு தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒருமுறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து, இதுகுறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ’கேரளாவில் காசர்கோடு பகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் பாஜகவிற்கு 1 வாக்கு அளித்தால் 2 வாக்குகள் பதிவானது எப்படி? இப்படி வாக்குகள் மாறி பதிவாக என்ன காரணம்?’ என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதையும் படிக்க: ’டைம்’ இதழ் வெளியிட்ட செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக்!

உச்ச நீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 1 | மெஷின் வந்தது ஏன்? வரலாற்றில் நடந்தது என்ன? ஏன் சர்ச்சையானது..?

உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்த தேர்தல் ஆணையம்

இதற்கு தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம், “கேரளத்தின் காசர்கோட்டில் நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு கூடுதல் வாக்கு பதிவானதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. பாஜகவிற்கு அதிகமாக வாக்கு அதிகமானது என்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முறைகேடாக பயன்படுத்த வாய்ப்பே இல்லை.

உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம்
உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம்pt web

தேர்தல் நடைமுறை தொடர்பாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் அடிப்படை இல்லை. தேர்தல் ஆணையத்தின்மீது எவ்வித பழியும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதை நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். வாக்குச்சீட்டு முறையை கோருவது பிற்போக்குத்தனமானது. அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் உறுதி செய்யப்பட்டிருப்பதால் தேர்தல் மோசடிக்கு வாய்ப்புகள் இல்லை” என தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் வாதம் வைத்துள்ளது.

இதையும் படிக்க: ’தாய்ப்பால் வேண்டாம்; சூரிய ஒளி மட்டும் போதும்’.. மனைவியை மிரட்டி 1 வயதுக் குழந்தையை கொன்ற தந்தை!

உச்ச நீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
புதிய மின்னணு வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் - தேர்தல் ஆணையம் தகவல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com