‘இஸ்ரேலுடன் ஒப்பந்தம் வேண்டாம்’ CEO அறையில் உள்ளிருப்பு போராட்டம்-28 ஊழியர்களை நீக்கம் செய்த கூகுள்!

கூகுள் நிறுவனத்தின் இஸ்ரேல் ஒப்பந்தத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய ஊழியர்கள் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூகுள், இஸ்ரேல்
கூகுள், இஸ்ரேல்ட்விட்டர்

காஸா நகர் மீது, கடந்த 6 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் போர் தொடுத்துவரும் நிலையில், 1.2 பில்லியன் டாலர் மதிப்பில் கிளவுட் சேவைகள் மற்றும் டேட்டா சென்டர் அமைப்பது தொடர்பாக கூகுள் நிறுவனமும் இஸ்ரேலும் இணைந்து கையெழுத்திட்டுள்ளன. ’புராஜெக்ட் நிம்பஸ்’ என்ற பெயரிலான இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக, கூகுள் ஊழியர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நியூயார்க், சியாட்டில் மற்றும் கலிபோர்னியாவின் சன்னிவேல் ஆகிய இடங்களில் உள்ள கூகுள் அலுவலகங்களில் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. நியூயார்க் மற்றும் கலிபோர்னியாவில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர், நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபடாமல் ஆதரவு மட்டும் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 9 பேர் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிக்க: மசூதியை நோக்கி அம்பு விடுவதுபோல் செய்கை.. சர்ச்சையில் சிக்கிய பாஜக வேட்பாளர்.. யார் இந்த மாதவி லதா?

கூகுள், இஸ்ரேல்
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பொருளாதார தடை; அமெரிக்காவின் அறிவிப்பும் தற்போதைய நிலையும்!

போராட்டக்காரர்கள் அலுவலகத்தைவிட்டு வெளியேற மறுத்ததால், நியூயார்க் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்களை கைதுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்னர் விசாரணை நடத்திய நிர்வாகம், போராடிய ஊழியர்களில் 28 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் தொடர்ந்து விசாரித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஊழியர்கள் நிறுவனத்தின் நிர்வாக விடுப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், நிறுவனத்தின் அமைப்புகளை அவர்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூகுள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், கூகுள் நிறுவனம் இஸ்ரேலுடன் செய்துள்ள ஒப்பந்தத்தை முழுவதுமாக கைவிடும்வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூகுள் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். Nimbus என்று பெயரிடப்பட்ட இந்த ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாஜகவுக்கு 1 வாக்கு அளித்தால் 2 வாக்குகள் பதிவாகிறதா? கேரள மாதிரி வாக்குப்பதிவில் அதிர்ச்சி புகார்!

கூகுள், இஸ்ரேல்
என்னது.. போட்டி நிறுவனத்தில் வேலைக்கு போறீங்களா! 300% சம்பள உயர்வு கொடுத்து தக்கவைத்த கூகுள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com