மூக்கு வழியாக நுழைந்து மூளையை உண்ணும் அமீபா; விநோத நோய்க்கு 10 வயது கொலம்பிய சிறுமி பலி!

கொலம்பியாவில் ’மூளையை உண்ணும் அமீபா..’ என்ற விநோத நோய்க்கு 10 வயது சிறுமி பலி ஆகியுள்ளார்.
கொலம்பியா
கொலம்பியா ட்விட்டர்

கோரதாண்டவமாடிய  கொரோனா  வைரஸ்

ஒவ்வொரு காலத்திலேயும் ஒவ்வொரு விதமான புதிய வைரஸ்கள் மனித உயிர்களைக் கொன்று போட்டிருக்கின்றன. அந்த வகையில் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமான கொரோனா வைரஸ்கூட, 2 ஆண்டுகளில் உலகம் முழுவதும் கோரதாண்டவம் ஆடி, லட்சக்கணக்கான உயிர்களைக் காவு வாங்கியது. பின்னர் தடுப்பூசி வருகைக்குப் பின்னர் அவ்வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும் அதன் திரிபுகள் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.

covid 19 virus
covid 19 virusfile image

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தற்போது மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் நோய்களும் அதிகம். அதிலும் இவ்வகையான நோய்களைக் குழந்தைகளை எளிதில் தாக்கிவிடக் கூடிய சூழல் அதிகம். பொதுவாக, எல்லாச் சூழ்நிலைகளிலுமே ஏதாவது ஒரு நோய், குழந்தைகளைத் தாக்கிக் கொண்டே இருப்பது இயல்பது என்றாலும் அவற்றிடமிருந்து அவர்களைப் பாதுகாப்பது பெற்றோரின் கட்டாய கடமையாகும். அந்த வகையில் நீச்சல் குளத்தில் குளித்த சிறுமி ஒருவருக்கு, விநோத பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பதுதான் மருத்துவ உலகையே அதிரவைத்துள்ளது.

கொலம்பியா
மூக்கு வழியாக நுழைந்து மூளையை உண்ணும் அமீபா; அரிய நோயால் பலியான கேரள சிறுவன்! விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

கொலம்பியாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி பலி

கொலம்பியாவைச் சேர்ந்தவர் டாடியானா கோன்சாலஸ். இவரது 10 வயது மகள் ஸ்டெபானியா வில்லமிசார். இவர் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் சென்றபோது, நீச்சல் குளம் ஒன்றில் குளித்துள்ளார். இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் அவருக்கு காதுவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இது சில நாட்களில் சரியாகிவிடவே, சாதாரண அலர்ஜியாக இருக்கும் என்று அவர்கள் நினைத்துள்ளனர். இருப்பினும், இரண்டு வாரங்களில் அவரது உடல்நிலை மோசமானதாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் அவர் படுக்கையில் இருந்தே எழுந்திருக்க முடியாத சூழல் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், மருத்துவர்கள் எவ்வளவு முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையில் அட்மிட் ஆன மறுவாரமே தீவிர சிகிச்சை பெற்றுவந்த, அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அந்தச் சிறுமியின் மரணம் குறித்து மருத்துவர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அதில்தான் அந்தச் சிறுமிக்கு அமீபிக் என்செபாலிடிஸ் என்ற பாதிப்பு இருந்ததை உறுதி செய்துள்ளனர். இந்த பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழக்க 97% வாய்ப்பு இருக்கிறது. இது, பொதுவாக ’மூளையை உண்ணும் அமீபா’ என்று குறிப்பிடப்படுகிறது.

கொலம்பியா
மூளையை உண்ணும் அரிய வகை அமீபா நோய் - எச்சரிக்கும் அமெரிக்க சுகாதாரத்துறை

இந்தியாவில்கூட இந்நோயினால் 12 பேர் உயிரிழப்பு

இதுகுறித்து சிறுமியின் தயார் டாடியானா கோன்சாலஸ், "அவருக்கு இதுபோன்ற ஒரு பாதிப்பு ஏற்பட்டதை எங்களால் நம்பவே முடியவில்லை. நீச்சல் குளத்தில் குளிக்கும்போது, அந்த அமீபா மூக்கின் வழியாக உடலில் நுழைந்துள்ளது. அவருக்கு பல்வேறு வழிகளில் சிகிச்சை அளிக்க முயன்றோம். இருப்பினும், எதற்கும் பலன் இல்லை" என்றார்.

இந்த அமீபா தொற்றால் மூளை காய்ச்சல் ஏற்பட்டு இறப்பவர்களின் விகிதம் 97 சதவிகிதமாக உள்ளது. அமெரிக்காவில் இதுவரை இந்நோயால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் நான்கு பேரை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விர்ஜினியாவில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு ஒன்றில், மூளைக் காய்ச்சலால் இறந்த 16 ஆயிரம் பேரின் உடல்களை உடற்கூறாய்வு செய்ததில், 5 பேர் நெக்லேரியா பவுலேரி அமீபாவால் உண்டாகும் மூளைக் காய்ச்சலினால் இறந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. ஆனால் உடற்கூறாய்வு அறிக்கை வரும்வரை, இவர்கள் எதனால் இறந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இந்தியாவில்கூட இந்நோயினால் 12 பேர் இறந்துள்ளனர்.

கொலம்பியா
மூளையை உண்ணும் அமீபாவால் அமெரிக்காவில் 18 மாத குழந்தை பலி! இது என்ன புது நோய் தொற்று?

மனித மூளையை பாதிக்கும் நெக்லேரியா பவுலேரி

நோய்த்தொற்றைக் கண்டுபிடிப்பதில் ஏற்படும் தாமதத்தால் ஆபத்து அதிகமாகிறது. பாக்டீரியாவை உண்டு உயிர்வாழும் ஒற்றை உயிரணுவான நெக்லேரியா, சூடான நீரில் இருப்பதையே விரும்புகிறது. நெக்லேரியாவின் ஒரே ஒரு இனமான நெக்லேரியா பவுலேரி மட்டுமே மனித மூளையை பாதிக்கிறது. சூடான நண்ணீரில் இவை உயிர் வாழ்கின்றன. எங்கும் உயிர் வாழக்கூடிய இந்த நுண்ணுயிரியை நம்முடைய வெறும் கண்களால் பார்க்க முடியாது. மைக்ரோஸ்கோப் மூலமாக மட்டுமே இதை கண்டறிய முடியும். குளங்கள், கால்வாய்கள் மற்றும் ஆறுகளில் இவை செழிப்பாக வளர்கின்றன. நல்லவேளையாக, இந்த நெக்லேரியா பவுலேரி கழிமுகத்திலோ அல்லது குளிர்ந்த நீரிலோ இருப்பதில்லை. ஆனால் இவை குழாய் நீரில் உயிர் வாழ்கின்றன. தண்ணீரின் சுவையோ, நிறமோ மாறாததால், இவை இருப்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. கோடை காலத்தில், குறிப்பாக வெப்பநிலை 46 டிகிரி செல்சியசை அடையும் போது இவை செழித்து வளர்கின்றன.

மூக்குத் துவாரத்தின் வழியாக நம் உடலுக்குள் செல்லும் அமீபா, நரம்புகள் வழியாக மூளையை சென்றடைகிறது. குளம் போன்ற நீர்நிலைகளில் அதிக நேரம் நீச்சலடித்து, தண்ணீருக்கு அடியில் இருந்தால், இவை தாக்கும் அபாயம் அதிகமுள்ளது. ஆழ் கடலில் நீச்சல் அடிப்பவர்களையும் இந்நோய் தாக்கியுள்ளது.

இதையும் படிக்க: வழிகாட்டிய தோழன்! வாரன் பஃபெட்டின் நண்பர் சார்லஸ் முங்கர் மறைவு- 50 ஆண்டு நட்பு சாத்தியமானது எப்படி?

குழந்தை மற்றும் இளைஞர்களை அதிகம் தாக்கும் நெக்லேரியா 

குழந்தைகளையும் இளைஞர்களையும்தான் நெக்லேரியா பவுலேரி அதிகமாக தாக்கியுள்ளது. இளைஞர்கள் அதிக நேரம் தண்ணீரில் நேரத்தைச் செலவழிப்பார்கள் என்பதால் தான் அவர்களை இந்நோய் அதிகமாக தாக்குகிறது என நாம் கருதலாம். ஆனால் இதன் உண்மையான காரணங்கள் இதுவரை தெரியவில்லை. ஒருமுறை நமது உடலில் நுழைந்த பிறகு, தொற்றின் வேகம் கூடுகிறது. மூளையை அடைந்ததும் பல்கிப்பெருகி அங்குள்ள செல்களை அழிக்கிறது. இவை பெரும்பாலும் வாசனை நரம்புகளில் இருக்கின்றன.

நோய் தொற்று ஏற்பட்ட ஐந்து நாட்களில் அறிகுறிகள் வெளிப்படத் தொடங்குகிறது. தலைவலி, காய்ச்சல், பசியின்மை, தொண்டை வலி, பிரமைகள் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். ஒரு சிலருக்கு மூளையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கியதும், தொற்றின் வேகம் அதிகமாகி, ஐந்து அல்லது பத்து நாட்களில் நோயாளியை கொன்று விடுகிறது.

இதையும் படிக்க: ரூ.40,000 கோடி செலவில் இரண்டாவது விமானந்தாங்கி போா்க்கப்பல் தயாரிக்க இந்தியா முடிவு!

நோய்தொற்று எப்படி தெரிந்துகொள்ள முடியும்?

மூளையை உண்ணும் இந்த அமீபா, முதன்முதலில் ஆஸ்திரேலியாவில் 1965-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவை 8 முதல் 15 மைக்ரோ செ.மீ. அளவு கொண்டது. இதற்கு தோதான சூழ்நிலைகளில் பல்கிப் பெருகுகின்றன. வழக்கமாக பாக்டீரியாக்களை உண்டு உயிர் வாழும் இவை, மனித மூளையை அடைந்ததும் செல்களை உண்ணத் தொடங்குகிறது.

அமீபாவால் நமக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை நாம் எப்படி தெரிந்துகொள்வது? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தொற்று முழுமையடையும் வரை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 75 சதவிகிதம் பேருக்கு முற்றிய நிலையில் தான் கண்டுபிடிக்க முடிந்தது. நம் உடலில் அமீபா இருக்கிறதா என்பதை விரைவாக தெரிந்துகொள்ளும் வகையில் எந்தவித சோதனையும் இப்போதைக்கு நம்மிடம் இல்லை.

மருத்துவ அறிவியலில் இவ்வுளவு முன்னேற்றம் கண்டிருந்தாலும், இந்த மூளை உண்ணும் அமீபாவிற்கு எதிரான மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. வேறு அமீபாக்களுக்கு எதிரான மருந்துகள் வெற்றிகரமாக ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், இவை யாவும் மனித உடல்களை குணப்படுத்தும் அளவிற்கு இல்லை என்பதுதான் உண்மை.

இதையும் படிக்க: உ.பி.: பொதுக்குழாயில் தண்ணீர் குடித்த பட்டியலின இளைஞர்.. மாற்று சமூகத்தினர் தாக்கியதில் உயிரிழப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com