உ.பி.: பொதுக்குழாயில் தண்ணீர் குடித்த பட்டியலின இளைஞர்.. மாற்று சமூகத்தினர் தாக்கியதில் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசத்தில் பொதுக்குழாயில் தண்ணீர் குடித்த பட்டியலின இளைஞரை, இதர சாதியினர் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
model image
model imagefreepik

இந்த உலகில், சாதியை எதிர்த்தும் சமூகநீதிக்காகவும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தாலும், இன்றும் எங்கோ ஒரு மூலையில், சாதிய ரீதியான அடக்குமுறைகள் தொடர்ந்து அரங்கேற்றப்படுவதுதான் வேதனையின் உச்சமாக இருக்கிறது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் பொதுக்குழாயில் தண்ணீர் குடித்ததற்காக இதர சமூகத்தினரால் தாக்கப்பட்டு, உயிரிழந்திருப்பதுதான் தற்போதைய இணையச் செய்தியாக உள்ளது.

model image
model imagefreepik

உத்தரப்பிரதேச மாநிலம் படவுன் மாவட்டத்தில் உள்ள சத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் கமலேஷ். 24 வயது இளைஞரான இவர், பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். இவர், கடந்த நவம்பர் 27ஆம் தேதி, அங்குள்ள பொதுக் குழாயில் ஒன்றில் தண்ணீர் குடித்துள்ளார். இதை அப்பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சார்ந்த சூரஜ் ரத்தோர் மற்றும் அவரது கூட்டாளிகள் பார்த்துள்ளனர். பின்னர், அந்தக் குழாயில் கமலேஷ் தண்ணீர் குடித்ததற்காக அவரை தடியால் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் காயமடைந்த கமலேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். இதுகுறித்து கமலேஷின தந்தை அளித்த புகாரின்பேரில் சூரஜ் ரத்தோர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க: வழிகாட்டிய தோழன்! வாரன் பஃபெட்டின் நண்பர் சார்லஸ் முங்கர் மறைவு- 50 ஆண்டு நட்பு சாத்தியமானது எப்படி?

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com