மூளையை உண்ணும் அரிய வகை அமீபா நோய் - எச்சரிக்கும் அமெரிக்க சுகாதாரத்துறை

மூளையை உண்ணும் அரிய வகை அமீபா நோய் - எச்சரிக்கும் அமெரிக்க சுகாதாரத்துறை
மூளையை உண்ணும் அரிய வகை அமீபா நோய் - எச்சரிக்கும் அமெரிக்க சுகாதாரத்துறை

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் மூளையை உண்ணும் அரிய வகை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதாக அம்மாகாண சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள தம்பா நகரில் ஒருவருக்கு மூளை உண்ணும் அரியவகை அமீபா நோய் இருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. நெக்லேரியா பவுலேரி (Naegleria fowleri) என்ற நோய் தொற்று மூலம் இந்த நோய் ஏற்படுகிறது . இந்த நோயானது நேரடியாக மூளையிலுள்ள திசுக்களைத் தாக்கும் என்றும் உயிரிழப்புக்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிடிசி இணையதளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, “இந்நோயானது ஏரி, குளம் உள்ளிட்டவற்றில் வாழும் அமீபா மூலம் பரவுகிறது என்றும் அவ்வகையான அசுத்தமான நீருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் போது, அந்த அமீபா மூக்கின் வழியாக உடலுக்குள் செல்கிறது என்றும் கூறியிருக்கிறது. மேலும் உடலுக்குள் செல்லும் இந்த அமீபா நேரடியாக மூளைப் பகுதிக்குச் செல்வதாகவும் அங்கு செல்லும் இந்த அமீபாக்கள் நெக்லேரியா பவுலேரி வகையான தொற்றை உருவாக்குவதாகவும் தெரிவித்துள்ளது.

பிபிசி வெளியிட்டுள்ள தகவலின் படி, அப்பகுதியில் உள்ள குழாய், குளம், ஏரி ஆகியவற்றில் உள்ள நீரில், மக்களின் நாசி தொடர்பு கொள்ளா வண்ணம் எச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாகவும், நீச்சலடித்து குளிப்பது மற்றும் வெப்ப அலைகள் போன்றவை இந்நோயின் பாதிப்பை அதிகரிக்க செய்வதாகவும் கூறியுள்ளது.

இந்நோயின் அறிகுறிகள் பின்வருமாறு:

காய்ச்சல், வாந்தி எடுத்தல், தூக்கமின்மை, கடுமையான தலைவலி, வாசனை மற்றும் சுவையில் மாற்றம், கழுத்துப்பிடிப்பு, மாறுபட்ட மனநிலை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com