உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம்
உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம்pt web

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்... பயன்படுத்தப்பட்ட ஈரானின் ட்ரோன்கள்.. என்ன நடக்கிறது?

ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய மூன்று ஆண்டுகளில் உக்ரைன் மீதான மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலை ரஷ்யா வெள்ளிக்கிழமை அன்று நடத்தியுள்ளது. இது குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.
Published on

உக்ரைன் முழுவதிலும் 539 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைனின் வான்பாதுகாப்புப் படைகள் 270 இலக்குகளை வெற்றிகரமாகத் தடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 2 குரூஸ் ஏவுகணைகளும் (cruise missiles) அடங்கும். கூடுதலாக, 208 இலக்குகள் ரேடாரில் இருந்து காணாமல் போனதாகவும், இதற்குக் காரணமாக மின்னணு இடையூறு (jamming) நடவடிக்கைகள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உக்ரைன் முழுவதிலும் 539 ட்ரோன்கள் மற்றும் 11 ஏவுகணைகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தத் தாக்குதலில் ஈரானால் வடிவமைக்கப்பட்ட ஷாஹெட் வகை ட்ரோன்களும் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. உக்ரைனின் வான்பாதுகாப்புப் படைகள் 270 இலக்குகளை வெற்றிகரமாகத் தடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் 2 குரூஸ் ஏவுகணைகளும் (cruise missiles) அடங்கும். கூடுதலாக, 208 இலக்குகள் ரேடாரில் இருந்து காணாமல் போனதாகவும், இதற்குக் காரணமாக மின்னணு இடையூறு (jamming) நடவடிக்கைகள் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம்
புதிதாக PF திட்டத்தில் சேருவோருக்கு ரூ.15,000 ஊக்கத் தொகை.. ELI திட்டம் அறிமுகம்!

மறுபுறம், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் உட்பட ரஷ்யாவின் பல நகரங்களில் தாக்குதல் நடத்த முயன்ற உக்ரைனிய ட்ரோன்களை ரஷ்யாவின் வான்பாதுகாப்புப் படைகள் சுட்டுவீழ்த்தியுள்ளன. குறிப்பாக ரஷ்யாவின் வோரோனேஜ் பகுதியில் உள்ள போரிசோக்லெக்ஸ்க் விமான தளத்தை உக்ரைன் படைகள் தாக்கியதாக உக்ரைனின் ராணுவத் தளபதி தெரிவித்திருக்கிறார். இது ரஷ்யாவின் Su-34, Su-35S மற்றும் Su-30SM போர் விமானங்களின் "தாயகத் தளம்" என்று கூறப்படுகிறது. இதில் உயிரிழப்பு அல்லது சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று உக்ரைன் கூறியுள்ளது. மூன்றுமணி நேரத்தில் 42 ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது,

தாக்குதல் நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடலில் உக்ரைனின் வான் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்தலாம், அமெரிக்காவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான கூட்டு ஆயுத உற்பத்தி மற்றும் ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்ததாக ஜெலன்ஸ்கி தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இந்த உரையாடலை மிகவும் முக்கியமான மற்றும் பயனுள்ள உரையாடல் என ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம்
இபிஎஸ்-க்கு Z ப்ளஸ் பாதுகாப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களைச் சந்தித்த டொனால்ட் ட்ரம்ப்பிடம் இந்த தொலைபேசி உரையாடல் குறித்தும் போர் முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.. சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், எனக்குத் தெரியாது என்றும், அது நடக்குமா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார். முன்னதாக புதின் உடனான உரையாடல் குறித்துப் பேசிய அவர், புதின் போரை நிறுத்த முயல்கிறார் என்று நான் நினைக்கவில்லை. புதின் உடனான உரையாடலில் நான் மகிழ்ச்சி அடையவில்லை. கடைசி வரை மக்களைக் கொல்ல விரும்புவதாகத் தெரிகிறது. இது நல்லதல்ல. அது மோசமானது... மேலும் நான் அதிருப்தி அடைந்தேன்” எனத் தெரிவித்தார். ஆனால், ஜெலன்ஸ்கி உடனான தொலைபேசி உரையாடலில் தான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். உரையாடல் தொடர்பாகப் பேசிய அவர், இது ஒரு நல்ல உரையாடலாக அமைந்ததாகத் தெரிவித்தார்.

உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை
உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை முகநூல்

உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அனுப்புவதை அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. அவற்றில் வான் பாதுகாப்பு ஏவுகணைகளும் அடங்கும். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "நாங்கள் அவர்களுக்கு உதவி செய்து வருகிறோம், தொடர்ந்து உதவுவோம்" எனத் தெரிவித்தார்.

உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம்
வியக்க வைக்கும் ஆச்சரியம்.. 3500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com