வியக்க வைக்கும் ஆச்சரியம்.. 3500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு!
கடல் மட்டத்தில் இருந்து 1,970 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைப்பகுதி.. மண்ணாலும், கற்களாலும் கட்டப்பட்ட வீடுகள் கட்டடங்களைக் கொண்ட பழங்கால நகரத்தின் ட்ரோன் காட்சிகளை வெளியிட்டுள்ளனர் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த இடம் பசிபிக் கடலோரப்பகுதிகளையும், Andes மற்றும் Amazon-அயும் இணைக்கும் வணிக மையமாக அமைந்திருக்கலாம் என்று கணிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
3500 ஆண்டுகள் பழமையான நகரம்..
Barranca மாகாணத்தில் உள்ள Penico என்ற இந்நகரம், கி.மு.1,800 மற்றும் 1,500 ஆண்டு காலத்தையொட்டியதாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மிகப்பழமையான 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட Caral - SUPE நாகரிகத்தின் தொடர்ச்சியாக இந்த இடம் பார்க்கப்படுகிறது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காரல் நாகரிகத்தின் பழமையான 32 கட்டமைப்புகள் (( Monument structures)) , எகிப்து, இந்தியா, சுமேரியா மற்றும் சீன நாகரிகங்களின் சமகாலத்து நாகரிகமாக கருதப்படுகிறது. பெனிகோவில் தொல்லியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து தங்களின் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருகிறார்கள்.
காரல் நாகரிகம், இயற்கை பேரிடர்களால் அழிந்திருக்கக் கூடும் என்று வல்லுநர்கள் கருதும் வேளையில், புதிதாக கண்டறியப்பட்டுள்ள இந்த தொல் நகரம், பல மர்மங்களை கட்டவிழ்க்கும் என்று தொல்லியல் அறிஞர்கள் நம்புகிறார்கள்.