“இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து தரும்” - அதிபர் ஜோ பைடன்

இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து தரும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் - நெதன்யாகு
ஜோ பைடன் - நெதன்யாகுani

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் 12வது நாளாக நீடிக்கிறது. ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை வீசித் தாக்கினர். அதன்பின்னர் இஸ்ரேல் அதிகாரபூர்வமாக போர் பிரகடனம் செய்து பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள், கட்டடங்கள் குண்டுவீச்சால் உருக்குலைந்து போய் இருக்கின்றன.

ஜோ பைடன் - நெதன்யாகு
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலால் உருக்குலைந்த காஸா நகரம்...
twitter

இந்த நிலையில், அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் இன்று (அக். 18) இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு வந்தடைந்தார். அவரது வருகையையோட்டி, வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவரை இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு நேரில் சென்று வரவேற்றார். இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இதையும் படிக்க: ’பாகிஸ்தானை வீழ்த்த மாந்திரீகரை வைத்து செய்வினை செய்தார்’ - ஜெய்ஷா மீது பாக். பத்திரிகையாளர் புகார்

அப்போது இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு பேசுகையில், “அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பினர் ஒரேநாளில் 1400 இஸ்ரேலியர்களைக் கொன்றனர். அக்டோபர் 7ஆம் தேதி என்பது இஸ்ரேலுக்கு மோசமான நாள். ISIS-ஐ விட ஹமாஸ் அமைப்பினர் மோசமானவர்கள். ஹமாஸைத் தோற்கடிக்க உலக நாடுகள் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். அமெரிக்கா போன்ற ஒரு உண்மையான நண்பர் இஸ்ரேலுடன் துணைநிற்பது மிகுந்த மகிழ்ச்சி. இன்றும் நாளையும் எப்போதும் அமெரிக்கா இஸ்ரேலுடன் நின்றதற்கு நன்றி” என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “இந்த முக்கியமான நேரத்தில் இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்து தரும். இஸ்ரேலுக்கு முழுமையாக அமெரிக்கா துணை நிற்கும்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிக்க: மஜாஜ் செய்தபடியே மீட்டிங் நடத்திய விமான நிறுவன சி.இ.ஓ. - சர்ச்சையான பின் கொடுத்த விளக்கம்

முன்னதாக இஸ்ரேல் பயணத்தை முடித்துவிட்டு, ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு சென்று, அங்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா, எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்சிசி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் ஆகியோருடன் பைடன் முக்கிய ஆலோசனை நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் காஸா மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பால் பாலஸ்தீன அதிபர் பைடனை சந்திக்க மறுத்துவிட்டார். இதையடுத்து பைடனின் ஜோர்டான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, ட்விட்டரில் ஜோ பைடன் வெளியிட்டுள்ள பதிவில், ’ஹமாஸின் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளவும், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும் நான் இன்று இஸ்ரேலுக்குச் செல்கிறேன். பாலஸ்தீனியர்களின் சுயநிர்ணய உரிமைக்காக ஹமாஸ் நிற்கவில்லை என்பதை தெளிவுபடுத்துவேன்’ எனப் பதிவிட்டிருந்தார்.

இதையும் படிக்க: இங்கிலாந்துக்கு விழுந்த அதேஅடி... தென்னாப்ரிக்காவிற்கு மரண அடிகொடுத்து வெற்றி பெற்ற நெதர்லாந்து!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com