’பாகிஸ்தானை வீழ்த்த மாந்திரீகரை வைத்து செய்வினை செய்தார்’ - ஜெய்ஷா மீது பாக். பத்திரிகையாளர் புகார்

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியை இந்தியா செய்வினை வைத்து வெற்றிபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், ஜெய் ஷா
இந்தியா, பாகிஸ்தான், ஜெய் ஷாட்விட்டர்

உலகக்கோப்பை: பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வெற்றி

10 அணிகள் பங்கேற்றுள்ள 13வது ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை தொடர், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் கடந்த அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் அந்த அணியிடம் தோற்றதில்லை என்ற பெருமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்தியா - பாகிஸ்தான் போட்டியைப் பொறுத்தவரை பலவித விமர்சனங்களும் எழுந்தபடி வந்துகொண்டிருக்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், ஜெய் ஷா
அசைக்க முடியாத வரலாறு..பாகிஸ்தானை 8வது முறையும் சாய்த்த இந்திய அணி-ஒரே போட்டியில் நிகழ்ந்த சாதனைகள்!

இந்தியா - பாகிஸ்தான் போட்டி: தொடரும் விமர்சனங்கள்

ஏற்கெனவே பாகிஸ்தான் வீரர்களுக்கு மாட்டிறைச்சி உணவு அனுமதிக்கப்படாதது, அந்நாட்டு ரசிகர்களுக்கு விசா வழங்கப்படாதது, சர்ச்சையைக் கிளப்பிய மேக்மைட்ரிப் (Make My Trip) நிறுவனம் வெளியிட்ட விளம்பரம், இந்தியா - பாகிஸ்தான் போட்டியின்போது கலைநிகழ்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடு, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமுக்கு இந்திய வீரர் விராட் கோலி ஜெர்சி வழங்கியது, போட்டியன்று மைதான DJ ஜெய்ஶ்ரீ ராம் பாட்டு போட்டது முதல் அந்நாட்டு வீரர்களை நோக்கி அதே வாசகத்தை (ஜெய்ஶ்ரீ ராம்) ரசிகர்கள் கோஷமிட்டது வரை எல்லாம் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், ஜெய் ஷா
’லாகூரில் நடந்தது நினைவில்லையா?’ விமர்சனத்தை எழுப்பிய ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம்.. வலுக்கும் கண்டனங்கள்!

செய்வினை வைத்ததாக ஜெய்ஷா மீது குற்றச்சாட்டு

இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா செய்வினை வைத்ததாலேயே இந்திய அணி வெற்றிபெற்றதாக, பாகிஸ்தானை சேர்ந்த டிக்டாக் பிரபலமும், பத்திரிகையாளருமான ஹரீம் ஷா என்பவர் கூறியிருக்கும் கருத்து, அடுத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, அவர் தன்னுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சாமியார் ஒருவர் யாகம் வளர்ப்பதையும் பகிர்ந்துள்ளார்.

கரீம்ஷா வெளியிட்ட வைரல் பதிவு

மேலும் அந்தப் பதிவில், ’தனக்கு நம்பகமான இடத்தில் இருந்து கிடைத்த செய்தியின் அடிப்படையில், ஜெய் ஷா புகழ்பெற்ற மாந்திரீகர் கார்த்திக் சக்ரபர்த்தி என்பவரை பணி அமர்த்தி பாகிஸ்தான் அணிக்கு எதிராகச் செய்வினை வைத்துள்ளார். இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரிக்க வேண்டும்’ என அதில் தெரிவித்துள்ளார். தற்போது, இந்தப் பதிவு ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

கரீம் ஷா
கரீம் ஷா

யார் இந்த கரீம் ஷா?

டிக்டாக் பிரபலமும் பாகிஸ்தான் பத்திரிகையாளருமான இந்த கரீம் ஷா, ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கியவர் எனக் கூறப்படுகிறது. லண்டனில் இருந்த வந்த தன் கணவரைக் காணவில்லை எனவும், அவரைக் கண்டுபிடித்து தரும்படி காவல் துறையில் புகார் அளித்திருந்தார். அதற்கு முன்பாக, தன்னுடைய நிர்வாண வீடியோவை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தார். மேலும், பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தொடர்பாக அவர் கூறிய கருத்துகளும் எதிர்ப்பைச் சந்தித்தன.

உலகக்கோப்பை தொடரை நடத்தும் பிசிசிஐ

2023 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஐசிசி நடத்தும் இந்த கிரிக்கெட் தொடரை, இந்தியாவில் திட்டமிட்டு நடத்தும் பொறுப்பை, பிசிசிஐ பகிர்ந்துகொண்டுள்ளது. இந்த அமைப்பின் செயலாளராக தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா உள்ளார். அவர்தான் உலகக்கோப்பை தொடர் நடத்துவது குறித்து பல்வேறு முடிவுகளை எடுத்துவருகிறார். பிசிசிஐ செயல்பாடுகளிலும், ஜெய் ஷா மீதும் அவ்வப்போது விமர்சனம் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையும் செய்வினை வைத்ததாகக் குற்றச்சாட்டு

இதேபோல், கடந்த 2017ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி வென்றிருந்தது. இந்தத் தொடரை, இலங்கை செய்வினை வைத்து வென்றதாக, அந்நாட்டைச் சேர்ந்த பெண் மந்திரவாதி கங்கா சொய்சா வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு கிரிக்கெட் அரங்கில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இந்த செய்தியை அப்போதே விளையாட்டுத் துறை அமைச்சர் மறுத்திருந்ந்தார்.

ஜோதிடர் அறிவுரைப்படி கால்பந்து வீரர்கள் வெளியான தகவல்

முன்னதாக, இந்திய அணியில் இடம்பெறவேண்டிய கால்பந்து வீரர்கள், டெல்லியைச் சேர்ந்த ஜோதிடர் பூபேஷ் சர்மா அறிவுரைபடியே தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்தப் பிரச்னையும் பூதாகரமாகி இருக்கிறது.

இந்தியா, பாகிஸ்தான், ஜெய் ஷா
ஜோதிடர் அறிவுரைப்படியே வீரர்கள் தேர்வு?.. புயலை கிளப்பும் இந்திய கால்பந்து அணி தேர்வு விவகாரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com