மஜாஜ் செய்தபடியே மீட்டிங் நடத்திய விமான நிறுவன சி.இ.ஓ. - சர்ச்சையான பின் கொடுத்த விளக்கம்

பிரபல விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மசாஜ் செய்தபடியே மீட்டிங் நடத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டோனி ஃபெர்னாண்டஸ்
டோனி ஃபெர்னாண்டஸ்லிங்க்டு இன்

பிரபல விமான நிறுவனங்களில் ஒன்று, ஏர்ஏசியா. இதன் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் டோனி ஃபெர்னாண்டஸ். இவர், சமீபத்தில் மசாஜ் செய்தபடியே மீட்டிங் கலந்துகொண்டதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மேலாடை இல்லாமல் இருக்கும் அவரை, பெண் ஒருவர் மஜாஜ் செய்கிறார். அதன்படியே, நிர்வாக கமிட்டி மீட்டிங்கிலும் கலந்துகொண்டு பதில் அளிக்கிறார். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. இதற்குப் பலரும் கடும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

டோனி ஃபெர்னாண்டஸ்
டோனி ஃபெர்னாண்டஸ்லிங்க்டு இன்

இதுதொடர்பாக லிங்க்டு இன் தளத்தில் டோனி ஃபெர்னான்டஸ் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஒரு வார பணிகள், மன அழுத்தத்தை ஏற்படுத்தின. அப்போதுதான், வெரோனிட்டா ’மசாஜ் செய்யலாம்’ என பரிந்துரை செய்தார். அதன்படி, நான் மசாஜ் செய்துகொண்டே நிர்வாகக் கூட்டத்தை நடத்தினேன். ஏர் ஆசியா முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்து வருகிறது. எங்களுக்கான மூலதனத்தை இறுதி செய்துள்ளோம். இதுவரை நாங்கள் செய்துள்ள பணிக்காகப் பெருமை கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: சையது முஷ்டாக் அலி தொடர்: யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த ரயில்வே அணி வீரர்! 8 சிக்ஸர் விளாசல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com