இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் உச்ச தலைவர் கொமேனி
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் உச்ச தலைவர் கொமேனிpt web

ஈரானை அணு ஆயுதங்களை நோக்கி தள்ளுகிறதா இஸ்ரேல்?

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த பகைமை தற்போது முழு அளவிலான போராக வெடித்துள்ளது. இது மத்திய கிழக்கில் இருநாடுகளுக்கிடையே உருவாகும் சண்டைகளைப் போல அல்ல..
Published on

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வந்த பகைமை தற்போது முழு அளவிலான போராக வெடித்துள்ளது. இது மத்திய கிழக்கில் இருநாடுகளுக்கிடையே உருவாகும் சண்டைகளைப் போல அல்ல.. அதைவிட பலமடங்கு ஆபத்தான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் ஈரான் இடையிலான இந்த போர் மத்திய கிழக்கை மிகவும் பதற்றமான சூழலுக்குத் தள்ளியுள்ளது. தற்போது வரை இருநாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டிருக்கும் சூழலில் இதுவரை நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. தற்போது வரை ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் கிட்டத்தட்ட 90% பொதுமக்கள் என்பது மிகவும் துயரமான ஒன்று. உலக நாடுகள் பலவும் இந்த பதற்றத்தைக் குறைக்க தம்மால் ஆன முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன.

தயாராக இருக்கும் ரஷ்யா

இஸ்ரேல் - ஈரான்
இஸ்ரேல் - ஈரான்முகநூல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்க தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov, ஈரான் - இஸ்ரேல் இடையில் உள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம், அமைதியான வழியில் தீர்வு காணப்பட வேண்டும் எனக்கூறினார். ஈரானில் அணுஆயுத தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் யுரேனியத்தை எடுத்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கான அணுமின் நிலையத்திற்கு உபயோகிக்க உதவ ரஷ்யா தயாராக இருப்பதாக தெரிவித்தார். பேச்சுவார்த்தைக்கு வழி இருந்தாலும், ஈரான் - இஸ்ரேல் இடையிலான சூழல் மிகவும் மோசமாக உள்ளதாக Dmitry Peskov தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் உச்ச தலைவர் கொமேனி
உலகெங்கும் அதிகரிக்கும் அணுஆயுதப் போட்டி.. ஓர் அதிர்ச்சித் தகவல்!

அணு ஆயுதமின்றி முடியாது

இஸ்ரேலின் தாக்குதலையும், ஆக்கிரமிப்புகளையும் அணு ஆயுதங்கள் இன்றி தடுக்க முடியாது என ஈரான் மிக உறுதியாக நம்புகிறது. ஏனெனில், ஹிஸ்புல்லா, ஹமாஸ், ஈரானின் முக்கிய போராளிக் குழுக்கள் போன்றவை இஸ்ரேலின் சமீபகால தாக்குதலால் பலவீனமடைந்துள்ளன. ஈரானின் மிக முக்கிய தலைவர்கள், அணு ஆயுத விஞ்ஞானிகள், உயர்மட்ட ஜெனரல்கள் போன்றோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மிக முக்கியமாக இரான் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளது. எனவே, இந்த இழப்பு ஈரானின் போர் உத்தியை மாற்றலாம் என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் நம்புகின்றனர். சரியான கட்டமைப்புகளும், சரியான பிரதிநிதிகளும் இல்லாமல் இஸ்ரேலின் கடுமையான தாக்குதலை ஈரான் எப்படிச் சமாளிக்கும் என கேள்வி எழுப்பும் அவர்கள், ஈரானின் எதிர்கால மற்றும் நம்பகமான தடுப்பாக அணு ஆயுதங்களாகத்தான் இருக்கும் எனத் தெரிவிக்கின்றனர்.

what reason of israel targets Irans nuclear sites
இஸ்ரேல் தாக்குதல்எக்ஸ் தளம்

ஈரான் எடுக்கும் முன்னெடுப்புகளுக்கு எல்லாம் இஸ்ரேல் கடுமையான தாக்குதலின் மூலம் மட்டுமே பதிலடி கொடுத்து வருகிறது. மறுபுறமோ, ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் எப்போதும் நமக்குதான் பேராபத்து என்பதில் இஸ்ரேல் உறுதியாக இருக்கிறது. இன்று கூட ஈரான் தலைநகரின் வான்பரப்பு முழுவதையும் தங்கள் படைகள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். இஸ்ரேலின் இரண்டு இலக்குகளில் ஒன்றை அடைந்துவிட்டதாக கூறியுள்ளார். தெஹ்ரானின் வான்பரப்பை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதால், தங்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்தும் எதிரிகளின் இலக்குகளை துல்லியமாக தகர்க்க முடியும் என்றும் ஈரான் உடனான மோதலில் இஸ்ரேல் வெற்றி பெற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளின் அச்சுறுத்தல்களுக்கு முடிவு கட்டுவதே தங்களது அடுத்த இலக்கு எனவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் உச்ச தலைவர் கொமேனி
“கட்டப்பஞ்சாயத்து செய்யத்தான் மக்கள் வாக்களித்தார்களா?” - ஜெகன் மூர்த்திக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

ஒப்பந்தத்திலிருந்து விலகலா?

இதில் மிக முக்கியமான விஷயம் ஒன்றிருக்கிறது. இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்கள், அணு ஆயுதத்தை நாடும் ஈரானின் வேகத்தை துரிதப்படுத்தலாம் அல்லது மட்டுப்படுத்தலாம்.. ஆனால், இஸ்ரேல் போரிலிருந்து பின்வாங்கினால், அணுசக்தி கொண்ட ஈரானை ஏற்றுக்கொண்டது போலாகிவிடும் என்பதை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச விரிவுரையாளர் ஃபாரா உறுதிப்படுத்துகிறார்.

ரஃபேல் க்ரோஸி
ரஃபேல் க்ரோஸி

இந்த விவகாரத்தில் சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ரஃபேல் க்ரோஸி ஏற்கனவே எச்சரித்திருந்தார். அதாவது, இஸ்ரேலின் தாக்குதல் ஈரானின் அணுசக்தி விருப்பங்களைத் தடுக்காமல் மேலும் உறுதிபடுத்தக்கூடும் எனவும் இது அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகுவதற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்திருந்தார். அவர் கூறியதன்படியே, 1968 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான நாடாளுமன்ற மசோதாவை ஈரான் தயாரிக்க இருப்பதாக அதன் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிய நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பு மற்றும் ஊடகத் தலைவர் இமான் ஷம்சாய், இது எம்பிக்களால் முன்வைக்கப்பட்ட திட்டமே என்றும் நாடாளுமன்றம் இனும் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஒசிராக் அணு உலை தாக்குதல்
ஒசிராக் அணு உலை தாக்குதல்pt web

1981 ஆம் ஆண்டில், ஈராக்கின் ஒசிராக் அணு உலையை அழிக்க இஸ்ரேல் F-16 போர் விமானங்களைப் பயன்படுத்தியது. ஈராக் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுப்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், அதற்குப் பின் வந்த சதாம் உசேன் அணு ஆயுத உருவாக்கத்தை விரிவுபடுத்தினார். பல்வேறு அதிகாரிகள் இராப்பகலாக வேலைப் பார்த்தனர். இஸ்ரேலின் தாக்குதலில் ஏற்பட்ட உயரதிகாரிகளின் இழப்புகளும், ஈரானுக்கு ஏற்பட்ட இழப்புகளும் அந்நாட்டை அணு ஆயுதத்தை நோக்கி வேகமாக போகச்செய்யும் என எச்சரிக்கின்றனர் உலக அரசியல் வல்லுநர்கள்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் உச்ச தலைவர் கொமேனி
அணு உலையில் கல்லீரல் சிகிச்சைக்கான மருந்து... மருத்துவத்துறையில் தாக்கத்தினை ஏற்படுத்திய சீனா

இந்த போருக்கு இடையே ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.. உதாரணத்திற்கு, ஈராக்கில் உள்ள மக்களின் மனநிலை, வளைகுடா நாடுகளின் நிலைப்பாடுகள், அதற்குப் பின்னிருக்கும் அரசியல், இருநாடுகளுக்கும் இருக்கும் பொருளாதாரப் பிரச்னைகள் என ஏகப்பட்ட விவகாரங்கள் இருக்கின்றன... இது இருநாடுகளுக்கு இடையிலான போர் மட்டுமல்ல... உலக அரசியலின் திசையை நிர்ணயிக்கக்கூடியது.. ஈரானின் எதிர்காலத்தையும் தாண்டி உலக அமைதியையும் நிர்ணயிக்கக்கூடியது. என்ன நடக்கப்போகிறது... வழக்கம்போல் பொருத்திருப்போம்....

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஈரான் உச்ச தலைவர் கொமேனி
ட்ரம்பை கொலை செய்ய சதியா... இஸ்ரேல் சொல்வது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com