YTTRIUM-90 பிரித்தெடுக்கும் பணியில்...
YTTRIUM-90 பிரித்தெடுக்கும் பணியில்...pt web

அணு உலையில் கல்லீரல் சிகிச்சைக்கான மருந்து... மருத்துவத்துறையில் தாக்கத்தினை ஏற்படுத்திய சீனா

கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்தை அணுஉலையில் உருவாக்கி சீனா சாதித்துள்ளது. இது மருத்துவத் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Published on

செய்தியாளர் ஜி.எஸ். பாலமுருகன்

சீனா வணிகமாக இயங்கும் அணுஉலையை பயன்படுத்தி YTTRIUM-90 என்ற மருந்து மூலக்கூறை தயாரித்து மருத்துவ உலகினை புருவம் உயர்த்த வைத்துள்ளது. சாதாரணமாக அணுஉலை என்பது மின்சாரம் உற்பத்திக்காகவே பயன்படுத்தப்படும். ஆனால் இப்போது அது மருந்து உருவாக்கவும் பயன்படுகிறது என்பதுதான் சீனா செய்திருக்கும் விஞ்ஞான சாதனையாகும். ZHEJIANG மாகாணத்தில் உள்ள QINSHAN அணுசக்தி நிலையத்தில் YTTRIUM-90ஐ வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. பீட்டா கதிர்வீச்சு வெளியிடும் ஒரு கதிரியக்க மூலக்கூறே YTTRIUM எனப்படுகிறது.

YTTRIUM-90 முக்கியமாக கல்லீரல் புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. ரத்தக்குழாய்கள் வழியாக நோய்த்தொற்று பகுதிக்குச் சிகிச்சை அளிக்கும் தொழில்நுட்பத்தின் மூலம், நோய்த் திசுக்களில் நேர்த்தியான முறையில் YTTRIUM-90 செலுத்தப்படுகின்றன. YTTRIUM கதிர்வீச்சு மூலக்கூறு நேரடியாக நோய் பாதிப்புக்கு எதிராக செயல்படுவதால் உலகளாவிய மருத்துவத்தில் முக்கிய சிகிச்சை வடிவமாக இருக்கிறது. பக்கவிளைவுகள் குறைந்து புற்றுநோய் மட்டுமே தடுக்கப்படுகிறது. சீனா உருவாக்கியுள்ள YTTRIUM-90ன் இயல்பு மற்றும் செயல்திறனை ஆராய்ச்சி செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவ பயன்பாட்டு நிலையை அடையும்.

YTTRIUM-90 பிரித்தெடுக்கும் பணியில்...
இங்கிலாந்து உளவுத்துறை MI6.. முதல்முறையாக பெண் தலைவர் நியமனம்.. யார் இந்த பிளேஸ் மெட்ரூவேலி?

அமெரிக்கா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகள்தான் இதுவரை YTTRIUM-90ஐ உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளும் அளவில் தயாரிக்கும் நாடுகளாகும். இப்போது இப்பட்டியலில் சீனாவும் சேர்ந்துவிட்டது. இந்தியாவில் ஆய்வு நிலையிலான உற்பத்தியில் உள்ளன. YTTRIUM-90 உற்பத்தி செய்யும் துறையில் இருந்த குறையை சீனாவின் வணிக அணுஉலைகள் தீர்க்கவுள்ளது. மேலும், சீனாவின் மருத்துவ சிகிச்சை மற்றும் அணுஉலை தொழில்நுட்பம் ஆகிய இரண்டு துறைகளும் புதிய நிலைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

YTTRIUM-90 பிரித்தெடுக்கும் பணியில்...
ட்ரம்பை கொலை செய்ய சதியா... இஸ்ரேல் சொல்வது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com