இஸ்ரேல் மீது தாக்குதலா.. ஈரானின் திட்டம் என்ன.. இந்தியர்களுக்கு மத்திய அரசு திடீர் கட்டுப்பாடு!

இஸ்ரேல் மீது அண்டை நாடான ஈரான் போர் தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பதையடுத்து, ’இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்வதை தவிர்க்க வேண்டும்’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல், ஈரான்
இஸ்ரேல், ஈரான்ட்விட்டர்

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை காஸா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. குறிப்பாக, காஸா நகருக்குள் முன்னேறியிருக்கும் இஸ்ரேல் ராணுவம், அதை முற்றிலும் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. தெற்குப் பகுதி தவிர, எகிப்து எல்லையையொட்டி அமைந்துள்ள ராஃபாவிலும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்முகநூல்

இஸ்ரேலுக்கு நிதி மற்றும் ஆயுத உதவி செய்துவரும் அமெரிக்காவே போர் நிறுத்தம் வேண்டும் எனக் கூறியுள்ளது. ஆனால், அதைப் பற்றி கவலைபடாமல் தொடர்ந்து இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், இதுவரை சுமுக முடிவு எட்டப்படவில்லை.

இதையும் படிக்க: மார்டன் உடையில் ஆண் நண்பர்களுடன் டான்ஸ்.. வீடியோ வைரலானதால் மலேசிய அழகு ராணி பட்டத்தை இழந்த அழகி!

இஸ்ரேல், ஈரான்
’நெதன்யாகு பதவி விலகணும்’- இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்த மக்கள்.. ஏன் தெரியுமா?

இந்த நிலையில், இஸ்ரேல் மீது அண்டை நாடான ஈரான் போர் தொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக 48 நேரம் கெடு விதித்திருப்பதாகவும் அந்நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ’இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் செல்வதை தவிர்க்க வேண்டும்’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தற்போது நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, மறு அறிவிப்பு வரும்வரை அனைத்து இந்தியர்களும் ஈரான் மற்றும் இஸ்ரேலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகங்களைத் தொடர்புகொண்டு தங்கள் இருப்பிடத்தைப் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அங்குள்ள இந்தியர்கள் தங்கள் பாதுகாப்பு தொடர்பாக மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் எனவும், முடிந்தவரை வெளியில் செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: அரசு பணத்தில் உல்லாசம்| வெளிநாடு சென்ற 3 ஐஏஎஸ் அதிகாரிகள்.. தணிக்கையில் வெளிச்சத்துக்கு வந்த மோசடி!

இஸ்ரேல், ஈரான்
உணவைத் தேடி ஓடிய நபர்கள்.. சுட்டு வீழ்த்திய இஸ்ரேல் ராணுவம்; காஸாவில் அரங்கேறிய கொடூரம்-பகீர் வீடியோ

இஸ்ரேலின் அண்டை நாடுகளில் ஒன்றான சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக கட்டடத்தின் மீது இஸ்ரேல் சமீபத்தில் (ஏப்ரல் 1) தாக்குதல் நடத்தியதாகவும் அதில் முக்கிய அதிகாரிகள் என 13 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்திருந்தது. இதில் மூத்த அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார். ”பிராந்தியத்தில் எது நடந்தாலும் அதற்கு சிரியாதான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் மேலும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு அவர்களின் தாக்குதல் நிலைகளை சிரியாவில் நிறுவுவதற்கு அனுமதிக்கக் கூடாது. இவை ஈரான் ராணுவம் பயிற்சியளிப்பதாகக் கூறப்படும் ஆயுதக் குழுக்களை அழிக்கும் நோக்குடன் நடத்தப்பட்டவை” எனவும் இஸ்ரேல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இதற்குப் பதிலடி கொடுக்க ஈரான் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் போர்ப் பதற்றம் நிலவுவதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. நாட்டின் உளவுத்துறை அதிகாரிகள் கூறியதை மேற்கோள் காட்டி, ஈரான் ஆளில்லா விமானங்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகளின் உதவியுடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேலும் கூறியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் தொடங்குமா என உலக நாடுகள் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளன.

இதையும் படிக்க: அசைவ உணவு வீடியோவை பார்த்தாலே மனது புண்படுமா.. அதுஎன்ன முகல் மைட்செட்! பிரதமரின் பேச்சு சரியானதா?

இஸ்ரேல், ஈரான்
வான்வழி தாக்குதல்: லெபனானில் கொல்லப்பட்ட ஹமாஸின் அரசியல் பிரிவு துணைத் தலைவர்! இஸ்ரேல் சொல்வது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com