மார்டன் உடையில் ஆண் நண்பர்களுடன் டான்ஸ்.. வீடியோ வைரலானதால் மலேசிய அழகு ராணி பட்டத்தை இழந்த அழகி!

அரைகுறை ஆடையில் ஆண் நண்பர்களுடன் ஆட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியதைத் தொடர்ந்து மலேசிய அழகி ராணி பட்டத்தை இளம்பெண் ஒருவர் இழந்துள்ளார்.
விரு நிக்காஹ் டெரின்சிப்
விரு நிக்காஹ் டெரின்சிப்ட்விட்டர்

மலேசியாவைச் சேர்ந்தவர் விரு நிக்காஹ் டெரின்சிப் (Viru Nikah Terinsip). 24 வயதான இவர், மலேசிய அழகு ராணிக்கான போட்டியில் வெற்றி வாகைசூடி சிறந்த அழகி பட்டம் பெற்றிருந்தார். இந்த நிலையில், தாய்லாந்து நாட்டுக்கு விடுமுறையில் சுற்றுலா சென்றிருந்த விரு நிக்காஹ், அங்கு ஆண் நண்பர்களுடன் நடனமாடியுள்ளார். மேலும் அவர்கள் மார்டன் ஆடை அணிந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அழகிக்கு எதிராக எதிர்ப்புகளும் கிளம்பியதுடன் கருத்துகளும் பதிவிடப்பட்டன. இதையடுத்து விரு நிக்காஹ் டெரின்சிப்பிடம் இருந்து மலேசிய அழகு ராணி பட்டத்தைத் திரும்ப பெறுவதாக நிகழ்ச்சி நடத்திய அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கடகாண்டுசுன் கலாசார சங்கத்தின் தலைவர் Kadazandusun Cultural Association (KDCA) டான்ஸ்ரீ ஜோசப் பைரீன் கிட்டிங்கன், “விரு நிக்காஹ் சாதாரண பெண்ணாக இருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் அழகு ராணி பட்டம் வென்றவர். நடன நிகழ்ச்சியால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் எங்கள் முடிவை ஏற்றுக்கொள்வார் என நம்புகிறோம். இதுபோன்ற தவறை மீண்டும் யாரும் செய்யாமல் இருக்க இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றா. இந்த நிலையில், விரு நிக்காஹ் டெரின்சிப் தான் வாங்கிய அழகு ராணி பட்டத்தை திருப்பி அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: சமரசமா..? மும்பை அணியில் திடீர் ட்விஸ்ட்! ரோகித்தை காரில் அழைத்துச் சென்ற ஆகாஷ் அம்பானி! #ViralVideo

விரு நிக்காஹ் டெரின்சிப்
“ரஷ்யாவுக்கு எதிராக போராட ராணுவத்தில் சேர்ந்தேனா?" - உக்ரைன் மிஸ் அழகி விளக்கம்

இதுகுறித்து விரு நிக்காஹ் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், “நான் என் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அழகுப் போட்டியில் கலந்துகொண்டேன். தற்போது எந்த வற்புறுத்தலும் அந்தப் பட்டத்தைத் திருப்பி அளித்துவிட்டேன்” என அதில் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில், ஒவ்வோர் ஆண்டும் Kadazandusun Cultural Association (KDCA) சார்பில், Kaamatan என்ற கலாசார நிகழ்வு நடத்தப்படும். இதில், தேர்வு செய்யப்படும் அழகிகளுக்கு Unduk Ngadau என்ற பட்டம் வழங்கப்படும். இந்தப் பட்டத்தைத்தான் கடந்த ஆண்டு, விரு நிக்காஹ் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விரு நிக்காஹ் டெரின்சிப்
நர்சிங் ஹோமில் வயதானவர்கள் முன் ஆட்டம் போட்ட அழகி - வலுக்கும் கண்டனம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com