தோனி இல்லாத CSK? ரசிகர்களுக்கு சாத்தியமா.. சங்கடமா? மாற்றுவதற்கான வழி என்ன?

ஐபிஎல் தொடரிலிருந்து தோனி ஒருவேளை ஓய்வுபெறுவாரானால், அவர் இல்லாத சிஎஸ்கே அணி அமையும். அப்படி அமைந்தால், அது எப்படியிருக்கும், ரசிகர்களை அது எந்தளவிற்கு மாற்றும் என இங்கே பார்ப்போம்.
தோனி
தோனிட்விட்டர்

சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி இருந்தாலும், அவ்வணியின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் ’தல’ தோனியின் பற்றி செய்திகளே தினந்தோறும் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், அவர் இந்த ஆண்டுடன் ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வு பெறப்போகிறாரா என்பது பற்றிய செய்திகள்தான் இணையதளங்களை நிரப்பிவருகின்றன.

ஆனாலும், இதுகுறித்து விரைவில் முடிவு தெரிவிப்பதாக தோனி, அணி நிர்வாகத்திடம் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், தோனி இல்லாத சிஎஸ்கே அணி அமையுமானால், அது எப்படியிருக்கும், ரசிகர்களை அது எந்தளவிற்கு மாற்றும் என இங்கே பார்ப்போம்.

தோனி
தோனிட்விட்டர்

சிஎஸ்கே என்றாலே தோனிதான் என்கிற நிலைக்கு அவ்வணி முத்திரை குத்தப்பட்டுவிட்டது. மேலும், தோனி இல்லாத சிஎஸ்கே அணியைப் பார்க்கவும் ரசிகர்கள் தயாராகவில்லை.

என்னதான் சிஎஸ்கே அணியில் சதமடிக்கும் பேட்டர்களும், சாதுர்யமாகப் பந்துவீசும் வீரர்களும் இருந்தாலும், ‘தோனி’ என்கிற ஒற்றைத் தலைவனின் பெயர்தான், ரசிகர்களின் உயிர்மூச்சாக இருக்கிறது.

தோனி இடம்பிடித்திருந்தபோதும் தற்போது நடப்புத் தொடரிலிருந்து அந்த அணி, பிளே ஆப்க்கு முன்னேற முடியாமல் வெளியேறியிருக்கிறது.

இதையும் படிக்க: India Head Coach கம்பீரா? கலக்கத்தில் சீனியர் வீரர்கள்.. காரணம் இதுதான்!

தோனி
எக்ஸ் தளம் மீது கோபமா.. இன்ஸ்டாவை அதிகம் விரும்புவது ஏன்? தோனி சொன்ன ருசிகர பதில்!

இப்படியான நிலையில், அவர் ஓய்வு பெறுவது என்பது சாதாரணமான விஷயமல்ல. அதை அவரது ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம், தோனிதான் சிஎஸ்கே என்றாகிவிட்ட நிலையில், அவர் ஓய்வு பெற்றால் நிச்சயம் அந்த அணிக்கான ரசிகர்கள் ஆதரவு குறையும். ஆம், மைதானங்களில் எல்லாம் மஞ்சள் படையினரை அவ்வளவு அதிகமாகப் பார்க்க முடியாது.

மேலும், சிஎஸ்கே அணியை ரசிகர்கள் கொண்டாடும் அளவின் விகிதமும் குறைந்துவிடும். அதனால், தோனி இல்லாத சிஎஸ்கே அணி மீள, இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கலாம். அப்போதும்கூட, தோனியின் ஆலோசனைகளும், அவர் காட்டும் வழிமுறைகளுமே பெரிதாக ஏற்கப்படும். காரணம், தோனியால் மட்டுமே சென்னை அணிக்கான கோப்பை சாத்தியம் என்று கனவுக் கோட்டை கட்டி வாழும் ரசிகர்கள் மத்தியில், வேறு கேப்டன்களின் முகங்கள் இன்னும் முழுதாய் பிரதிபலிக்கப் படவில்லை.

தோனி
தோனிX

அதனால்தான், ‘வலியால் துடித்தாலும் வயதாகிப் போனாலும் தோனியே வேண்டும்’ என ரசிகர்கள் விரும்புகின்றனர்; ஆர்ப்பரிக்கின்றனர். என்னதான் தனிப்பட்ட வீரர் ஒருவருக்கு மதிப்பும் மரியாதையும் இருந்தாலும், அது எல்லாக் காலத்திற்கும் நீடிக்காது. மேலும் எந்த வீரரும் போட்டிகளில் தொடர்ந்து விளையாட அவருடைய திறமையும் உடற்தகுதியும் ஒத்துழைக்க வேண்டும். இதையெல்லாம் கருத்தில்கொண்டுதான், தோனியின் எதிர்கால ஐபிஎல் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. ஆகையால், தான் இருக்கும்போதே, தன் தேவை இல்லாத சிஎஸ்கேவை தோனி உருவாக்க வேண்டும். அப்போதுதான் சிஎஸ்கேவும் எழுச்சி பெறும். ரசிகர்களின் தன்னம்பிக்கையையும், மனோபலத்தையும் குலைக்காத வகையில் நடைபோடும்.

இதையும் படிக்க: “டெஸ்ட்டிலிருந்து விரைவாகவே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணம்” - 10 ஆண்டுகளுக்குப் பிறகு பேசிய தோனி!

தோனி
CSK Vs RCB| கை கொடுக்க காத்திருந்த தோனி.. கண்டுகொள்ளாத RCB வீரர்கள்.. தேடிச் சென்ற விராட் கோலி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com