பாலஸ்தீனம் | தனி நாடாக அங்கீகரித்த 3 நாடுகள்.. தூதர்களைத் திரும்பப் பெற்ற இஸ்ரேல்!

அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்திருப்பதால், அந்நாட்டின் தூதர்களைத் திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், பாலஸ்தீனம்
இஸ்ரேல், பாலஸ்தீனம்twitter

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு (2023) அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை, காஸா நகர் மீது தாக்குதல் நடத்திவருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அதைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து இஸ்ரேல் போர் புரிந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போர்க் குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட், ஹமாஸ் தலைவர்கள் யாஹ்யா சின்வர், முகமது டெய்ப், இஸ்மாயில் ஹனியே ஆகியோரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் கரீம் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் -  ஈரான்
இஸ்ரேல் - ஈரான்முகநூல்
இதற்கிடையே, அயர்லாந்து, ஸ்பெயின் மற்றும் நார்வே ஆகிய நாடுகள் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது.

அயர்லாந்து சைமன் ஹாரிஸ் இதுகுறித்து கூறுகையில், “ஸ்பெயின் மற்றும் நார்வேவுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது அயர்லாந்துக்கும், பாலஸ்தீனத்திற்கும் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த நாளாகும். இஸ்ரேல் பாலஸ்தீன மோதலை தீர்க்க பாலஸ்தீனை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும்” எனத் தெரிவித்திருந்தார்.

அதுபோல் நார்வே பிரதமர் ஜோனாஸ் கார், "பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் அளிக்காவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி ஏற்படாது. தனி நாடாக செயல்படுவதற்கான உரிமை பாலஸ்தீனத்துக்கு உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: “மேட்சுல வயசாயிடுச்சுனு யாரும் பாவம் பார்க்க மாட்டாங்க..” வெளிப்படையாகப் பேசிய தோனி!

இஸ்ரேல், பாலஸ்தீனம்
”ரம்ஜான் மாதத்தில் காஸா மீது போர் வேண்டாம்” - இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தியதாக மோடி பேட்டி!
பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் நார்வே மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளின் முடிவை எதிர்த்து, தங்கள் நாட்டின் தூதர்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸ், "இஸ்ரேலின் இறையாண்மை மற்றும் அதன் பாதுகாப்பு குலைக்கப்படுவதை அங்கீகரிக்கும் யாரையும் இஸ்ரேல் பொருத்துக்கொள்ளாது. ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலுக்கு பிறகும், உலகம் இதுவரை கண்டிராத பாலியல் வன்கொடுமைகளை அவர்கள் செய்தபிறகும்... இந்த நாடுகள் ஹமாஸ் மற்றும் ஈரானுக்கு வெகுமதியளிக்கும் வகையில் பாலஸ்தீனத்தை அரசாக அங்கீகரிக்கின்றன.

ஹமாஸ் இஸ்ரேல் போர்
ஹமாஸ் இஸ்ரேல் போர்PT

இது அக்.7 பலியானவர்களை அவமதிக்கும் செயல். பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்குவது, காஸாவில் அடைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலின் பணயக்கைதிகளை மீட்கும் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கக்கூடும். ஸ்பெயின் அரசாங்கமும் இதே முடிவை எடுக்குமானால், ஸ்பெயின் நாட்டிற்கான இஸ்ரேலின் தூதரையும் திரும்பப் பெறுவோம்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: தோனி இல்லாத CSK? ரசிகர்களுக்கு சாத்தியமா.. சங்கடமா? மாற்றுவதற்கான வழி என்ன?

இஸ்ரேல், பாலஸ்தீனம்
இஸ்ரேல் | இறந்துபோன கர்ப்பிணியிடமிருந்து காப்பாற்றப்பட்ட சிசு.. 5 நாட்களுக்குப் பிறகு உயிரிழப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com