\
Horn of Africa Drought
Horn of Africa DroughtReuters

உணவின்றி இறந்த 1 கோடி உயிர்கள் : பெரும் ஆபத்தில் 20 லட்சம் மக்கள் |கண்டுகொள்ளாத உலக நாடுகள் !

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஒரே நாட்டில் மட்டும் 1 கோடி உயிர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பெரும் ஆபத்தில் 20 லட்சம் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
Published on: 
Summary

சோமாலியா, எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகளில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி தீவிரமடைந்துள்ளது. 15 லட்சம் மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு அகதிகளாக நகரங்களில் தங்கியுள்ளனர். உணவுப் பற்றாக்குறையால் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையை சந்திக்கின்றனர். ஐ.நா நிதி பற்றாக்குறையால் நிவாரணம் சிரமமாகியுள்ளது.

Horn of Africa என அழைக்கப்படும் ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதியில் சோமாலியா, எத்தியோப்பியா மற்றும் கென்யா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. இந்த நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டும் பருவமழை பொய்த்ததால் அங்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் வறட்சி தீவிரம் அடைந்துள்ளது.

வானிலை ஆய்வு மைய தரவுகளின் படி கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இப்பகுதியில் தொடர்ச்சியாக 5 பருவமழை காலங்கள் பொய்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சோமாலியா, தெற்கு எத்தியோப்பியா மற்றும் வடக்கு கென்யாவில் மட்டும் சுமார் 1 கோடிக்கும் அதிகமான கால்நடைகள் நீரின்றியும் தீவனமின்றியும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Horn of Africa Drought
கோடி கோடியாக லஞ்சம்.. அரசு அதிகாரிகள் நடுக்கம்.. நீதிபதி சொன்ன ஒரேயொரு வார்த்தை!!
Reuters

அதே போல, சோமாலியாவில் மட்டும் சுமார் 20 லட்சம் மக்கள் மிக மோசமான பட்டினி நிலையை அடைந்துள்ளனர் என்றும் ஐ.நா கூறியுள்ளது. ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சோமாலியாவில் 18 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதில் சுமார் 4,800-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு உயிருக்கு ஆபத்தான தீவிர நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த மோசமான இயற்கை பேரிடர் காரணமாக உணவு மற்றும் நீர் தேடி சோமாலியாவிற்குள் மட்டும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் சொந்த கிராமங்களை விட்டு வெளியேறி, நகரங்களின் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு உணவு மற்றும் குடிநீரை கொண்டுசெல்வதில் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

Reuters
Horn of Africa Drought
500 ஆண்டுக்கு பிறகு பிறகு.. நொறுங்கியது இயற்கை அதிசயம்.. சுற்றுலா பயணிகள் வருத்தம்!!

பல்வேறு போர்கள் காரணமாக ஐ.நா-வின் உணவுப் போட்டி மற்றும் நிவாரண திட்டங்களுக்கு தேவையான நிதியில் இந்த ஆண்டு 20% மட்டுமே கிடைத்துள்ளது. இந்த சூழலில் சோமாலியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு விநியோகம் செல்வதை சோமாலியாவின் கிராமப்புறப் பகுதிகளைக் கட்டுப்படுத்தி வரும் 'அல்-ஷபாப்' தீவிரவாத இயக்கம் தடுத்து நிறுத்தி வருவதாகவும் ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.

Horn of Africa Drought
வரலாற்றில் இல்லாத பேரிடர் : ஐரோப்பாவை உலுக்கிய இயற்கை.. வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com