\
A natural disaster of unprecedented scale shook Europe
A natural disaster in EuropeReuters

வரலாற்றில் இல்லாத பேரிடர் : ஐரோப்பாவை உலுக்கிய இயற்கை.. வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

ஐரோப்பாவில் இனிவரும் ஆண்டுகளிலும் அதிதீவிர வெப்ப அழுத்த நிகழ்வுகள் வழக்கமான ஒன்றாக மாறக்கூடும் என்றும் கோபர்நிகஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Published on: 

கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐரோப்பிய கோடை காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்ப அலைகள் வீசின. இந்த கோடைகால வெப்பத்தின் தீவிரத்தின் காரணமாக 34,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் இதில் பெரும்பாலானோர் வெப்பம் சார்ந்த நோய்கள் காரணமாக உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது.

ஐரோப்பிய வரலாற்றில் வெப்பத்தால் ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரிடராக இது பார்க்கப்பட்ட நிலையில், இந்த பேரிடரின் விரிவான அறிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் 'கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை' (Copernicus Climate Change Service - C3S) வெளியிட்டுள்ளது.

Reuters

அந்த அறிக்கையில், கடந்த கோடை காலத்தில் ஐரோப்பிய கண்டத்தின் 52% நிலப்பரப்பு "வலிமையான" (Strong), "கடுமையான" (Very Severe) மற்றும் "அதிதீவிரம்" (Extreme) என்ற 3 வகையான வெப்ப அழுத்தத்திற்கு உள்ளானது என்றும், இது ஐரோப்பா முன்னெப்போதும் காணாதது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் வட ஐரோப்பிய நாடுகளில் வலிமையான வெப்ப அழுத்தமும், தென் ஐரோப்பிய நாடுகளில் அதிகபட்சமாக அதிதீவிர வெப்ப அழுத்தமும் பதிவாகியுள்ளது.

குறிப்பாக தென் ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், போர்ச்சுகல் மற்றும் பால்கன் நாடுகள் இந்த வெப்ப அழுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டன என்றும், இரவு நேரங்களிலும் வெப்பநிலை குறையாமல் இருந்ததால், மனித உடல்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாமல் பல்வேறு மரணங்கள் ஏற்பட்ட காரணமாக அமைந்தது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

copernicus

நிலப்பரப்பில் மட்டுமல்லாது, ஐரோப்பாவைச் சுற்றியுள்ள மத்திய தரைக்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலின் சில பகுதிகளிலும் கடல் நீர் வெப்பநிலை இயல்பை விட பல டிகிரி உயர்ந்ததால் அதிக அளவிலான நீர் நீராவியாக மாறி ஐரோப்பியக் கடலோரப் பகுதிகளில் வெப்பம் மேலும் அதிகரிக்க வழிவகுத்தது என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

புவி வெப்பமயமாதல் காரணமாக ஐரோப்பிய கண்டம் உலகளாவிய சராசரியை விட இரு மடங்கு வேகத்தில் வெப்பமடைந்து வருகிறது என்றும், இனிவரும் ஆண்டுகளிலும் இத்தகைய அதிதீவிர வெப்ப அழுத்த நிகழ்வுகள் வழக்கமான ஒன்றாக மாறக்கூடும் என்றும் கோபர்நிகஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

A natural disaster of unprecedented scale shook Europe
விளையாட்டு உலகின் மிகப்பெரிய ஊழல்: Haaland போன்ற நட்சத்திர வீரர்களுக்கு தொடர்பா? ரசிகர்கள் அதிர்ச்சி
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com