\
Why did Hawaii's iconic Hōlei Sea Arch collapse into the Pacific
Hawaii Sea ArchInstagram

500 ஆண்டுக்கு பிறகு பிறகு.. நொறுங்கியது இயற்கை அதிசயம்.. சுற்றுலா பயணிகள் வருத்தம்!!

500 ஆண்டுகள் கம்பீரமாக இருந்த இயற்கையான கடல் வளைவு, தற்போது இடிந்து பசிபிக் கடலில் விழுந்துள்ளது.
Published on: 

செய்தியாளர் - கார்த்திகேயன்

அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள எரிமலைகள் தேசிய பூங்காவில், தெற்கு கடற்கரை பகுதியில், ஹோலே கடல் வளைவு உள்ளது. சுமார் 90 அடி உயரம் கொண்ட இந்த கடல் வளைவு, 500 ஆண்டுகளுக்கு முன்பு, இயற்கையாகவே உருவாகியுள்ளது. செப்டம்பர் 23-ஆம் தேதி வரை திடமாக இருந்த இந்த கடல் வளைவு, செப்டம்பர் 27-ஆம் தேதி அன்று, இரவு இடிந்து விழுந்துள்ளது. சரியாக எந்த நேரத்தில் இடிந்து விழுந்தது என்பதை அறிய முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், நோலோ புயலின் காரணமாக, பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருந்தபோது, இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடலில் இருந்து வரும் சக்திவாய்ந்த அலைகள் தொடர்ச்சியாக மோதி, மென்மையான பாறைகள் அரிக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த செயல்முறை வளைவின் அடிப்பகுதியை மிகவும் பலவீனப்படுத்தி, அதன் எடையைத் தாங்க முடியாத நிலைக்குக் கொண்டு சென்றது. இறுதியில், அந்த அழகிய இயற்கையான கடல் வளைவு, பிசிபிக் கடலில் இடிந்து விழுந்துள்ளது. இது ஒரு சில வருடங்களில் நடக்கும் நிகழ்வு அல்ல. பல நூற்றாண்டுகளாக கடல் அலைகள் தாக்கியதால் இயற்கை அரிப்பு நடந்து, இத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

pacific ocean
pacific oceanReuters

இந்த இயற்கை கடல் வளைவு எதிர்காலத்தில் ஒருநாள் கடலில் இடிந்து விழும் என்று தேசிய பூங்கா அதிகாரிகள் முன்பே எச்சரித்திருந்தனர். கடல் அலைகளின் தொடர்ச்சியான அரிப்பு காரணமாக இதுபோன்று பழமையான அமைப்புகள் உடைந்து விழுவது கடற்கரை பரிணாம வளர்ச்சியின் ஒரு இயல்பான பகுதிதான் என்று அவர்கள் குறிப்பிட்டனர். எதிர்காலத்தில் இதேபோன்று புதிய பாறை அமைப்புகளும் உருவாக வாய்ப்புள்ளது.

இடிந்து விழுந்த இந்த பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள உறுதியற்ற கடற்கரை விளிம்புகளுக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம் என்றும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் சிலர் மூடப்பட்டிருக்கும் இந்தப் பகுதிக்கு அருகிலுள்ள ஆபத்தான விளிம்புகளுக்குச் சென்று புகைப்படம் எடுப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. இது கடுமையான விபத்துகளுக்கும், கடலில் அடித்துச் செல்லப்படுவதற்கும் வழிவகுக்கும் என்பதால் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Why did Hawaii's iconic Hōlei Sea Arch collapse into the Pacific
காதலியைப் பிரிந்த எலான் மஸ்க்! “இனி சிறந்த பெற்றோர்களாக இருப்போம்” உருக்கமாக பதிவிட்ட ஷிவோன்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com