ட்ரோல் செய்வதற்காக சங்கி என்கிறார்கள்.. சங்கி என்பதற்கு இதுதான் அர்த்தம்.. வானதி சீனிவாசன் பளீச்

சங்கி என்ற வார்த்தையை குறிப்பிட்ட பதமாக பயன்படுத்துகிறார்கள். அதனை ஒரு இழிவுபடுத்தும் சொல்லாக பயன்படுத்துகிறார்கள். பா‌.ஜ.க.வில் இருப்பவர்களை குறி வைத்து இதுபோன்று ட்ரோல் செய்கிறார்கள் என்று கூறிய வானதி சீனிவாசன் அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்புதிய தலைமுறை

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக சங்கி என்ற வார்த்தை பேசுபொருளாக மாறியுள்ளது. ஒருசிலரால் சங்கி என்று ரஜினிகாந்த் சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்ட நிலையில், எனது அப்பா சங்கி இல்லை என்று லால் சலாம் பட இசைவெளியீட்டு விழாவில் பேசியிருந்தார் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

அப்போது அவர் பேசியதாவது, ”சில நேரங்களில் சோஷியல் மீடியாவில் அப்பாவைப் பற்றி மீம்ஸ்கள் வரும். அதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கும். அவரை சங்கி என்று ஒருசிலர் ட்ரோல் செய்கிறார்கள். சங்கி என்றால் என்னவென்று நண்பர்களிடம் கேட்டேன்.

அது ஒரு அரசியல் நிலைபாட்டை சார்ந்து இருப்பவர்களை அப்படி கூறுவார்கள் என்றார்கள். இந்த இடத்தில் தெளிவாக சொல்கிறேன். என் அப்பா சங்கி இல்லை. அப்படி இருந்திருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். இந்த படத்தின் அரசியலை புரிந்துகொண்டுதான் நடிக்க சம்மதித்தார். ஒரு மனிதநேயவாதியால் மட்டுமே இந்த படத்தில் நடிக்க முடியும். இந்த தைரியம் அப்பாவுக்கு மட்டும்தான் இருக்கிறது” என்று கூறினார்.

வானதி சீனிவாசன்
துள்ளாத மனமும் துள்ளும் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு - ஆர்.பி.சௌத்திரியிடம் ஆசிபெற்ற இயக்குநர் எழில்

இந்த கருத்துக்கு பலரும் தங்களது எதிர் கருத்துகளை பதிவிட்டு வந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த், ”சங்கி என்பது கெட்டவார்த்தை என்று ஐஸ்வர்யா எங்கும் சொல்லவில்லை. ‘அப்பா ஆன்மிகவாதி. அனைத்து மதங்களையும் விரும்புகிறவர். அவரை ஏன் சங்கி என சொல்கிறார்கள்’ என்பதே அவரது பார்வை” என்று பேட்டியளித்தார். இதற்கிடையே, சங்கி என்ற வார்த்தைக்கு தனது பாணியில் விளக்கமளித்துள்ளார் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த அவர், “சங்கி என்ற வார்த்தையை குறிப்பிட்ட பதமாக பயன்படுத்துகிறார்கள். அதனை ஒரு இழிவுபடுத்தும் சொல்லாக பயன்படுத்துகிறார்கள். பா‌.ஜ.க.வில் இருப்பவர்களை குறி வைத்து இதுபோன்று ட்ரோல் செய்கிறார்கள்.

சங்கி என்பதற்கு எங்களால் அர்த்தம் சொல்ல முடியாது. நாட்டின் நலனை விரும்புவர்களையும், நாட்டின் நலனுக்கு எதிராக உள்ளதை எதிர்ப்பவர்களையும் சங்கி என்று கூறுவதில் பெருமைகொள்கிறோம்.” என்றார்.

வானதி சீனிவாசன்
சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா கூறினாரா? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com