சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா கூறினாரா? நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்

சங்கி என்பது கெட்ட வார்த்தை என எங்கும் ஐஸ்வர்யா கூறவில்லை என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்கோப்புப்படம்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர்கள் விஷ்னு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் - ரஜினிகாந்த் - லைகா சுபாஷ் கரண்
‘லால் சலாம்’ இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் - ரஜினிகாந்த் - லைகா சுபாஷ் கரண்

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 26 ஆம் தேதி நடந்தது. இந்நிகழ்வில் லைகா சுபாஸ்கரன், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட லால் சலாம் குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “அப்பா சங்கி இல்லங்க.. ரஜினிகாந்த் சங்கி கிடையாது. ரஜினிகாந்த் எனும் மனிதர் சங்கியாக இருந்தால் லால் சலாம் எனும் படத்தில் இருக்கமாட்டார். இதை நான் ஒரு இயக்குநராக சொல்ல வேண்டும் என நினைக்கின்றேன். அது நீங்கள் படத்தைப் பார்த்தால் உங்களுக்கு புரியும்” என தெரிவித்திருந்தார்.

இது சமூக வலைதளங்களில் விவாதமானது. இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், “சங்கி எனும் சொல் அவ்வளவு இழி சொல் இல்லையே. அவருக்கு இமயமலைக்கு போவதற்கு பிடிக்கின்றது. போகிறார். பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் நண்பர் அவர்கள் அழைத்தால் பார்க்கப்போகிறார். துக்ளக் விழாவிற்கு போகிறார், கருணாநிதி விழாவிற்கும் போகிறார்தானே. கலைஞர்களை சுதந்திரமாக இருக்க விடவேண்டுமே ஒழிய உங்களது விருப்பு வெறுப்புகளை பொறுத்திப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது” என தெரிவித்திருந்தார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “சங்கி என்பது கெட்டவார்த்தை என்று ஐஸ்வர்யா எங்கும் சொல்லவில்லை. ‘அப்பா ஆன்மீகவாதி. அனைத்து மதத்தினையும் விரும்புகிறவர். அவரை ஏன் சங்கி என சொல்கிறார்கள்’ என்பதே அவரது பார்வை...” என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com