துள்ளாத மனமும் துள்ளும் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு - ஆர்.பி.சௌத்திரியிடம் ஆசிபெற்ற இயக்குநர் எழில்

நடிகர் விஜய், நடிகை சிம்ரன் நடிப்பில் உருவாகி வெற்றிநடை போட்ட துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி இந்த படத்தில் தயாரிப்பாளர் ஆர்பி.சௌத்திரியை சந்தித்து படத்தின் இயக்குநர் எழில் வாழ்த்து பெற்றார்.
துள்ளாத மனமும் துள்ளும் - 25 ஆண்டுகள்
துள்ளாத மனமும் துள்ளும் - 25 ஆண்டுகள்புதிய தலைமுறை

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி தயாரித்த “துள்ளாத மனமும் துள்ளும்” படம் வெளியாகி இன்றோடு 25வது ஆண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், தனது முதல் படமான இந்தப் படத்தை இயக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரியை நேரில் சந்தித்து இனிப்பு மற்றும் பூச்செண்டு கொடுத்து இயக்குநர் எழில் ஆசி பெற்றார்.

Vijay and Simran
Vijay and Simranpt desk

இது தொடர்பாக எழில் பேசுகையில், “இந்த படத்தின் நாயகன் விஜய் சாரை சந்திக்க நேரம் கேட்ட போது, உடனடியாக என்னை வரச் சொல்லி வாழ்த்து சொன்னதோடு, அவரது பழைய படங்கள் மற்றும் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் உள்ளிட்ட பல விஷயங்களை விரிவாக என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

ரொம்ப நாட்களுக்கு பிறகு மனம் விட்டு பேசிக் கொண்டிருந்தார். படத்தின் நாயகி சிம்ரன் அவர்களும் ஃபோனில் வாழ்த்தினார்” என்றுள்ளார்.

எழில் - ஆர்.பி.சௌத்ரி
எழில் - ஆர்.பி.சௌத்ரிpt desk

டைரக்டர் எழில் அடுத்து இயக்கி வரும் படம், இன்ஃபினிட்டி கிரியேஷ்ன்ஸ் பி.ரவிசந்திரன் தயாரிக்க நடிகர் விமல் நடிக்கும் தேசிங்குராஜா 2. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com