அம்பேத்கருக்கு மாலை.. சமூகநீதி முறையில் பொறுப்பு.. கொள்கை, கொடி என்ன? விஜய் போடும் கணக்குதான் என்ன?

"நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு முடிவுகள் வந்தவுடன் தலைவர் நேரடியாக களத்தில் இறங்க இருக்கிறார். மக்களை சந்திப்பார். கட்சியின் கொள்கை, கொடி போன்றவற்றை அவரே அறிவிப்பார். இவை அனைத்தும் ஜூன் மாதத்திற்கு பிறகு நடைபெறும்" - லயோலா மணி
விஜய் - அம்பேத்கர்
விஜய் - அம்பேத்கர்pt

14ம் தேதியும் 14 ஆண்டுகால அரசியலும்!

தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், பொதுவெளியில் தொண்டர்களை, பொதுமக்களை எப்படி கையாள்வார் என்று கேள்விக்கணைகள் பறந்துகொண்டிருக்க, அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு விஜய்யே நேரில் சென்று மாலை அணிவிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக மக்கள் இயக்கத்தை நடத்தி வரும் விஜய், கடந்த ஏப்ரல் 14ம் தேதி, அதாவது அம்பேத்கர் பிறந்தநாளில்தான் அரசியல் வேலைகளை தீவிரப்படுத்தினார். ஆம், அந்த நாளில், தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அம்பேத்கர் சிலைகளுக்கு மக்கள் இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறினார் விஜய். அந்த நாளில் இருந்து ஓராண்டு முடிவதற்குள், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற குறளை முன்வைத்து கட்சி தொடங்கியிருக்கிறார் விஜய்.

விஜய்
விஜய்

இந்த நேரத்தில் கடந்த ஏப்ரல் ஏப்ரல் 14ம் தேதி தொடங்கி கடந்த ஓராண்டுகளாக விஜய்யும் அவரது மக்கள் இயக்கத்தினரும் முன்னெடுத்த அரசியல் வேலைகள் மற்றும் செயல்பாடுகளை ஒருமுறை திரும்பி பார்க்கலாம்.

விஜய் - அம்பேத்கர்
"குக் வித் கோமாளி 5வது சீசனில் நான் பங்கேற்கவில்லை" - வைரலான தகவலுக்கு Full Stop வைத்த போஸ்ட்!

“நல்ல தலைவர்களை நீங்கதான் தேர்ந்தெடுக்கணும்”

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தொடங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் காமராஜர், பெரியார் மற்றும் முத்துராமலிங்க தேவர் போன்ற தலைவர்களின் சிலைகளுக்கு அவர்களது பிறந்தநாள் மற்றும் நினைவுநாள்களில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விஜய்
விஜய்

இதற்கிடையே, கடந்த ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற 3 மாணவர்களை அவர்களின் குடும்பத்தோடு, கல்வி விருது கொடுத்து சர்பரைஸ் கொடுத்தார் நடிகர் விஜய். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக விழாவில் பங்கேற்ற 1400 மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கி, அவர்களின் குடும்பத்தோடு போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த விழாவில் பேசிய அவர், ”நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மாணவர்கள் அனைவரும், தங்களது பெற்றோரிடம் காசு வாங்கிட்டு ஓட்டு போடக்கூடாது என்பதை அறிவுறுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

விஜய் - அம்பேத்கர்
’அங்கிருந்து தொடங்குனா நல்ல சென்டிமெண்ட்!’ பிரமாண்ட மாநாட்டை கூட்டும் த.வெ.க தலைவர் விஜய்..எங்கு?

காமராஜர் பிறந்தநாளில் இரவு நேர பாடசாலை!

அதேபோன்று, கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில், மக்கள் இயக்கம் சார்பில் இலவச இரவு நேர பாடசாலை என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த முன்னெடுப்பு சென்னையில் தொடங்கி, பல்வேறு மாவட்டங்களிலும் மக்கள் இயக்கத்தினர் செயல்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே, விலையில்லா மருந்தகம், குழந்தைகளுக்கான சத்துணவு பொருட்களான பால், முட்டை, ரொட்டி வழங்குதல், ரத்த தானம் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்த விஜய் மக்கள் இயக்கத்தினர், கடந்த அக்டோபர் மாதம் இலவச சட்ட ஆலோசனை மையத்தை தொடங்கினர்.

அதேபோல கடந்த டிசம்பர் மாதத்தில் தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்கள் மற்றும் உதவித்தொகையை வழங்கினார் நடிகர் விஜய். ஒவ்வொருவருக்கும் அவர் கையாலே பொருட்களை வழங்கி செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

விஜய் - அம்பேத்கர்
மகன்களை ஹீரோவாக களமிறக்கும் தங்கர் பச்சான், முத்தையா! எஸ்ஏசி பாணியில் படையெடுத்த இயக்குநர்கள் லிஸ்ட்

“நீங்கள்தான் மன்னர்கள்.. நான் தளபதி மட்டுமே”

முன்னதாக, லியோ பட வெற்றி விழாவில் பேசிய அவர், சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து, ”மக்களாகிய நீங்கள்தான் மன்னர்கள். நான் உங்களது தளபதி. நீங்கள் ஆணையிடுங்கள். அதை நான் செய்து முடிக்கிறேன்” என்று பேசினார். விழா மேடையில் 2026 என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்று சூசகமாக சொல்லி கடந்து சென்ற அவர், தமிழக அரசியல் களத்தில் திருமாவளவன், கனிமொழி, சீமான், அன்புமணி மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்களின் பிறந்தநாளுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தும் தெரிவித்து வந்தார்.

விஜய்
விஜய்

இந்நிலையில்தான், கடந்த 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, 2024ல் போட்டியில்லை. யாருக்கும் ஆதரவும் இல்லை. 2026ல்தான் போட்டி என்று கூறி, பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் விஜய்.

விஜய் - அம்பேத்கர்
“அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; என் ஆழமான வேட்கை” - ‘தமிழக வெற்றி கழகம்’ தலைவராக விஜய் அறிக்கை!

திமுக, அதிமுகவை மிஞ்சும் விஜய்யின் திட்டம்

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்கள் இருந்து வந்தாலும், அரசியல் கட்சிகளில் நிர்வாக வசதிக்காக சில தொகுதிகளை தொகுத்து அதனை ஒரு மாவட்டமாக பிரித்து அதற்கு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், ஆளும் கட்சியான திமுகவில் தொகுதிகள் அனைத்தும் சுமார் 72 மாவட்டங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதேபோல, அதிமுகவில் சுமார் 82 மாவட்ட பொறுப்புகள் உள்ளன. ஆனால், புதிதாக கட்சியை தொடங்கியிருக்கும் விஜய், 2 தொகுதிகளை சேர்த்து ஒரு மாவட்டம் என்ற கணக்கில் 234 தொகுதிகளுக்கு 100 மாவட்ட பொறுப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளார். அதன்படி, கட்சியின் நிர்வாக வசதிக்காக, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியை விட கூடுதல் மாவட்ட பொறுப்புகள் தவெகவில் உருவாக்கப்பட்டுள்ளது.

விஜய்
விஜய்

தேர்தலில் போட்டியிட 2 வருட கால அவகாசம் இருந்தாலும் மிக விரைவில் கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க தொழில்நுட்ப உதவியுடன் தவெக களமிறங்கியுள்ளது. அதாவது, உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டுமே, புதிய செயலி ஒன்று சிறப்பாக உருவாக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் ஓரிரு மாதங்களில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கவும் விஜய் திட்டமிட்டுள்ளாராம். இதில், எந்த மாவட்டத்தில் யார் அதிக உறுப்பினர்களை சேர்க்கிறார்களோ, அவருக்கே மாவட்ட பொறுப்பில் முன்னுரிமை என்றும் கூறப்படுகிறது.

விஜய் - அம்பேத்கர்
”2 கோடி உறுப்பினர்களை சேர்க்கணும்” - தவெக நிர்வாகிகளுக்கு டார்கெட்! பொறுப்பு யாருக்கு என விளக்கம்!

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் விஜய்?

இதற்கிடையில்தான், வரும் ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் சென்னையில் இருக்கும் அவரது மணிமண்டபத்திற்கு விஜய்யே நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, அனைத்து சமூதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அங்கீகாரம் கொடுக்கும் வகையில், கட்சியில் பொறுப்புகள் பாகுபாடு இன்றி கொடுக்க திட்டமிட்டுள்ளாராம் விஜய். அம்பேத்கர், காமராஜர் மற்றும் பெரியார் போன்றோரின் வழிகளில் கட்சியின் கொள்கைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அம்பேத்கர் - காமராஜர் - பெரியார் - விஜய்
அம்பேத்கர் - காமராஜர் - பெரியார் - விஜய்

மதுரையில் வைத்து விரைவில் மாநாடு நடத்த இருக்கிறார் என்று வெளியான தகவலுக்கு தவெக சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு கட்சியின் கொடி, கொள்கை மற்றும் சின்னம் குறித்த அறிவிப்புகளை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் என்றும் நமக்கு கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

விஜய் - அம்பேத்கர்
“திமுகவில் இருந்து பெரும் படை வரும்; மாற்றத்தை யாரும் சும்மா விரும்ப மாட்டாங்க” - தவெக லயோலா மணி!

கட்சியின் கொள்கை, கொடி எப்போது?

இது குறித்து தவெக செய்தி தொடர்பாளர் லயோலா மணியிடம் நாம் பேசியபோது, ”அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு கட்சி சார்பில் சென்று மரியாதை செலுத்துவது உறுதி. ஆனால், தலைவரே நேரில் வருவாரா என்ற கேள்விக்கு அதற்கான அறிவிப்புதான் பதிலாக அமையும். அவர் வருகிறார் என்றால் கூட்டம் அதிகமாக இருக்கும். அதற்கு போலீஸ் பாதிகாப்பு மற்றும் அனுமதி போன்றவை தேவைப்படும். விரைவில் பார்க்கலாம்” என்றார். மேலும், “இப்போதைக்கு மாநாடு எதுவும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு முடிவுகள் வந்தவுடன் தலைவர் நேரடியாக களத்தில் இறங்க இருக்கிறார்.

விஜய் - அம்பேத்கர்
விஜய் - அம்பேத்கர்

மக்களை சந்திப்பார். கட்சியின் கொள்கை, கொடி போன்றவற்றை அவரே அறிவிப்பார். இவை அனைத்தும் ஜூன் மாதத்திற்கு பிறகு நடைபெறும். சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஜனநாயக முறையிலேயே கட்சி இயங்கி வருகிறது. அதற்கேற்றபடி உழைப்பவர்களுக்கும், பின்தங்கிய, அங்கீகாரம் இல்லாத சமூகத்தினருக்கு எல்லாம் வாய்ப்பு, பதவிகள் அனைத்தும் அவர்களது செயல்பாட்டைப் பொறுத்து கொடுக்கப்படும்” என்றார்.

அதன்படி, நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு, தவெக தலைவர் விஜய் மக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார். கேள்விகளுக்கு பதிலளிப்பார். பணிகள் தீவிரமடையும் என்பது உறுதியாகியுள்ளது.

விஜய் - அம்பேத்கர்
கில்லி முதல் பில்லா வரை.. மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் ஹிட் படங்கள்.. எப்போது தெரியுமா? லிஸ்ட் இதோ!!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com