TNBudget2026 | 'இனி டோட்டலாக இலவசம்'.. மாணவர்களே ரெடியா..? வெளியான முக்கிய அறிவிப்பு!
செய்தியாளர்; M. மீரா
2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று அறிவித்தார். அதில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடியும், உயர் கல்வித்துறைக்கு ரூ.8,393 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழுவிவரம் என்னவென்று இங்கே பார்க்கலாம்
* கற்றலில் முதலிடம் தமிழ்நாடு திட்டத்துக்காக ரூ.25 கோடி ஒதுக்கீட்டில் பள்ளிப்பாடம் மறுசீரமைக்கப்பட்டு கற்றல் வெளிப்பாடுகளில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உருவாக்கப்படும்.
* 5.32 லட்சம் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2026-27 கல்வியாண்டில் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஹெல்மெட் & வாட்டர் பாட்டில் வசதியுடன் நவீன மிதிவண்டிகள் வழங்கப்படும் அதற்காக ரூ277 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளிகள் நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் நிறுவப்படும். 9-லிருந்து 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி, உணவுச் சீருடைகள், தங்குமிடம் பாடப்புத்தகங்கள் விலையில்லாமல் வழங்கப்படும் . பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ125 கோடி ஒதுக்கீடு.
* பள்ளி நிறைவுத் திட்டத்தின் கீழ் 3734 அரசுப் பள்ளிகளில் ரூ2132 கோடி மதுப்பீட்டில் நவீனமயமாகல் திட்டம் செயல்படுத்தப்படும். 2514 தொடக்கப்பள்ளிகள், 365 நடுநிலைப்பள்ளிகள், 855 உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஆண்டிற்கு மட்டும் ரூ300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 5000 அரசுப் பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு TN Spark விரிவுபடுத்தப்படும்.
* நீட் தேர்வு முறையினை உடனடியாக ரத்துசெய்து பொதுத் தேர்வின் அடிப்படையில் மருத்துவக் கல்விக்கான கோரிக்கையை தொடர்ந்திட ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
* கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்திட வெற்றி மடிக்கணினி திட்டத்துக்காக ரூ2000 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாடு மாணவர் தங்கும் விடுதி வசதிகளை மேம்படுத்திட சிறப்பு நோக்கு நிறுவனம் அமைக்கப்படும் இதற்காக ரூ10 கோடி ஒதுக்கீடு
* TN-Sudar திட்டத்தில் ரூ3,200 கோடி மதிப்பீட்டில் 200 ஒருங்கிணைந்த மாணவர் விடுதிகள், 1 லட்சம் நவீன படுக்கை வசதிகள் உருவாக்கப்படும். அரசு - தனியார் கூட்டாணமை முறையில் செயல்படுத்தப்படும் 20% கட்டுமான மானியமாக ரூ.640 கோடி அரசு வழங்கும். குளிரூட்டப்பட்ட டிஜிட்டல் கற்றல் மையங்கள், 24*7 பாதுகாப்பு, நவீன சமையலறைகள், தானியங்கி ஒதுக்கீட்டு முறை உள்ளிட்ட உயர்தர வசதிகள் ஏற்படுத்தப்படும்.
* மதுரையில் சீர்மிகு சட்டப்பள்ளி தரத்தில் மேம்பட்ட சட்டக்கல்வி வழங்க 300 மாணவர்களின் சேர்க்கையுடன் சட்டக் கல்லூரி தொடங்கப்படும்.
* உயர் கல்வி துறைக்கு 8,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர வழி கற்றல் என்ற புதிய தொழிற்பிரிவுக்காக ரூ10 கோடி ஒதுக்கீடு
12 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கும், 1 லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி. அரசு & தனியார் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முதற்கட்டமாக 20,000 இளைஞர்களுக்கு பணியிடப்பயிற்சி.
பட்டதாரிகள் மற்றும் தொழிற்கல்வி தகுதி பெற்றவர்களுக்கு மாத உதவித் தொகை வழஙகப்படும்.
நிரந்தர வேலைவாய்ப்பு இல்லாத குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
2031ஆம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்கப்படும்.

