\
Model Image
Model Imagechat gpt

’தங்கம்’ மழையில் தமிழ்நாடு.. பெண்களுக்கு மெகா ஜாக்பாட்.. ஒவ்வொரு வீட்டுக்கும் சர்ப்ரைஸ்!

அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு முன்னேப்போதும் இல்லாத வகையில், ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Published on

2026-27ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று அறிவித்தார். அதிலும் குறிப்பாக, தவெக அரசு பெண்களை முன்னேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதுகுறித்த திட்ட ஒதுக்கீடுகளைப் பார்ப்போம்..

  • தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு; அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

  • அண்ணன் சீராக, பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு

  • மண்ணின் மகள் திட்டத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் விவசாயம் செய்திட நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

  • அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு ரூ.165 கோடி நிதி ஒதுக்கீடு. இதன்மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முனைவுத் திறன் ஊக்குவிக்கப்படும்

  • அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டத்திற்கு முன்னேப்போதும் இல்லாத வகையில், ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் நடப்பாண்டில் 362 மாணவர்கள் பயன்பெறுவர்.

  • அனைவருக்கும் சம வாய்ப்பு தரும் நோக்கில், ரூ.462.41 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்க ஊக்கத் தொகை வழங்கப்படும்.

  • மதச்சார்பற்ற சமூக நீதி அரசு வாயிலாக கிறிஸ்தவ & முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி நிதி ஒதுக்கீடு

Model Image
”ஒரு சவரன் தங்கம்..” அமைச்சரின் அதிரடி அறிவிப்பு.. மக்களுக்கு மெகா குட் நியூஸ்!
  • சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு ரூ.9,818 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

  • தாய் கேர் திட்டத்திற்கு ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் கருவுற்ற பெண்களுக்கான சேவை மற்றும் உதவி மையங்கள் மாநிலம் முழுதும் அமைக்கப்படும்.

  • வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டத்திற்கு ரூ.110 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் 100% மானியத்தில் 5 ஆடுகள் வழங்கப்படும்; கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் & மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவர்.

  • கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.57 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் 10 ஆயிரம் தகுதி வாய்ந்த பெண்களுக்குக் கறவை மாடுகள் விலையில்லாமல் வழங்கப்படும்; பால் உற்பத்தி அதிகரிப்பு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரம் உறுதி செய்யப்படும்.

  • சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்திற்கு ரூ.354 கோடி நிதி ஒதுக்கீடு

Model Image
Model Imagechat gpt
  • சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டத்திற்கு, நடப்பாண்டில் ரூ.38,000 கோடி கடன் வழங்க இலக்கு; மகளிர் சுய உதவிக் குழுக்களை குறுந்தொழில் நிறுவனங்களாக மேம்படுத்தும் புதிய திட்டம்; தொழில் முனைவோரின் செயல் திறனை வெளிப்படுத்தும் சுய உதவிக் குழு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம்.

  • அனைவருக்கும் தரமான வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,253 கோடி நிதி ஒதுக்கீடு

  • கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு; இதன்மூலம் ‘வெற்றி 150’திட்டம் அறிமுகம்; 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்குக் கூடுதலாக 25 நாட்கள் வேலை; மொத்தம் 150 நாட்கள் வேலைவாய்ப்பு உறுதி

Model Image
தவெக அரசின் முதல் பட்ஜெட்.. எந்தெந்த திட்டத்திற்கு எத்தனை கோடி ஒதுக்கீடு? விரிவான பார்வை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com