திருமாவளவன்
திருமாவளவன்web

“இறந்த பிறகும் கருணாநிதியைத்தான் குறி வைக்கிறார்கள்” திருமாவளவன் பேச்சு

“இன்றைக்கு இறந்த பிறகும் கருணாநிதியைத்தான் குறி வைக்கிறார்கள்.. ஸ்டாலினை குறி வைக்கவில்லை. ஏன் இந்த திருமாவளவன் கூட முதன் முதலில் அரசியல் கட்சி ஆரம்பித்து எதிர்த்தது கருணாநிதியை தான்” என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கிறார்.
Published on

“இன்றைக்கு இறந்த பிறகும் கருணாநிதியைத்தான் குறி வைக்கிறார்கள்.. ஸ்டாலினை குறி வைக்கவில்லை. ஏன் இந்த திருமாவளவன் கூட முதன் முதலில் அரசியல் கட்சி ஆரம்பித்து எதிர்த்தது கருணாநிதியை தான்” என விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

மதுரை எஸ்எம்டி காலனி பகுதியை சேர்ந்த விசிக துணைப்பொதுச்செயலாளர் கனியமுதன் இல்ல திருமண விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், “தமிழகத்தின் ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள் குறித்து பொதுவெளியில் பேச முன் வருகிறார்கள் என்று சொன்னால் அது விசிக எழுச்சிக்குப் பின்பாக நடந்த பக்க விளைவு என்று சொல்லலாம். எந்தத் துறையிலும் இன்று நான் சிறுத்தை, நான் தலித், நான் அருந்ததியர் என்று சொல்லக்கூடிய நிலை உள்ளது.

தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தூய்மை பணியாளர்கள் போராட்டம்pt web

சென்னையில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் பிரச்சனைக்கு யார் யாரோ வந்து அமர்கிறார்கள் மகிழ்ச்சியாக இருக்கிறது. கலைத்துறையைச் சார்ந்தவர்கள் எல்லாம் வந்து சந்திக்கிறார்கள். ஒரு காலத்தில் இவர்களை தூய்மை பணியாளர்கள், கக்கூஸ் வேலை பார்ப்பவர்கள், குப்பைகளை பொறுக்கக்கூடியவர்கள் என்று அலட்சியமாக பார்த்தது சமூகம்; குப்பைகளைப் போல இந்த மக்களை ஒதுக்கி வைத்த காலம். ஆனால், 20 ஆண்டுகளில் தலைகீழாக மாறியிருக்கிறது என்றால் அது விடுதலை சிறுத்தைகளின் அரசியலுக்கு கிடைத்த வெற்றி. சிறுத்தைகளின் எழுச்சிக்கு கிடைத்த வெற்றி.

திருமாவளவன்
ட்ரம்ப் - புடின் சந்திப்பு: அலாஸ்கா தேர்வு செய்யப்பட்டது ஏன்?

பணியாளர்கள் போராட்டம் நடத்திய மூன்றாவது நாளிலேயே களத்திற்கு சென்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. நாங்கள் பணியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது அந்தப் பிரச்னை பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. நாங்கள் கலந்துரையாடிய போது அந்த பிரச்னை வெளிச்சத்திற்கு வரவில்லை. அந்த பிரச்சனை குறித்து யாரும் பேசவில்லை. போராட்டம் முடிய போகிறபோது வந்தவர்கள் எல்லாம் நம்மை என்ன செய்தோம் என்று கேட்கிறார்கள். வெறும் சமூக ஊடகப் போராளிகள், விசிக என்ன செய்தது என்று கேட்கிறார்கள்.

ஆறாம் தேதி முதல்வரை சந்தித்து பேசும்போது தூய்மை பணியாளர்கள் பிரச்சனை குறித்து கூறினேன். அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். இதெல்லாம் சமூக ஊடகப் போராளிகளுக்கு தெரியாது. திமுக மீதான வெறுப்பு, விடுதலை சிறுத்தைகள் மீதான காழ்ப்புணர்ச்சி.. இந்த கூட்டணியை உடைத்து விட வேண்டும் என்கிற சதித்திட்டத்தோடு வன்மத்தை கக்குகிற அவர்களுக்கு திடீரென தூய்மை பணியாளர்கள் மீது கரிசனம் ஏற்பட்டுள்ளது.

திருமாவளவன்
திருமாவளவன்web

குப்பையாய் கிடக்கிற இந்த மக்களோடு குப்பையாய் கிடக்கிறவன் இந்த திருமாவளவன். தூய்மை பணியாளர்களுக்காக முதன்முதலில் இயக்கம் தொடங்கி அந்த இயக்கத்தை வழிநடத்தக் கூடியது நாம். இந்த வரலாற்று பின்னணி தெரியாதவர்கள் எல்லாம் நம்மை விமர்சிக்கிறார்கள். களப்பணிகளில் எந்தத் தொடர்பும் இல்லாத கும்பல் நம்மை விமர்சிக்கிறது. அவர்களுக்கு இருக்கிற ஆதங்கம் என்னவென்றால் எந்த பின்புலமும் இல்லாமல் இந்த அரசியலில் திருமாவளவன் தாக்குப் பிடித்துள்ளார். இந்த மக்களை அமைப்பாக்கி விட்டார். அணி திரட்டி விட்டார். ஒரு மாநில கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை பரிணாமம் பெற வைத்துவிட்டார் என்கிற பொறாமை உணர்ச்சிதான்.

திருமாவளவன்
ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் இன்று முதல் அமல்..பாஸை பெறுவது எப்படி?

25 ஆண்டு கால தேர்தல் அரசியல் நெருக்கடிகளை சமாளித்து தேசிய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி, லோக் ஜன் சக்தி கட்சிக்கு அடுத்தபடியாக அங்கீகாரம் பெற்ற மாநில கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. சனாதன சக்திகளை எதிர்த்து இந்தியாவிலேயே ஒரு அம்பேத்கர் இயக்கம் பாரதிய ஜனதாவோடு, ஆர்எஸ்எஸ்ஸோடு எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் போராடிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது விடுதலை சிறுத்தைகள் கட்சி தான்.

thol thirumavalavan speech on facebook live
தொல் திருமாவளவன்எக்ஸ் தளம்

ஒரு வாரத்திற்கு முன்பு, எப்படி திருமாவளவன் எம்ஜிஆரை பற்றியும் ஜெயலலிதாவை பற்றியும் பேசலாம் என் மீது பாய்ந்து பிராண்டினார்கள். எனது 35 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான் என்ன பேச வேண்டும் என்பதை குறிப்பெடுத்தோ தயார் செய்தோ பேசுவதில்லை. என் மனதில் தோன்றுவதை பேசுவேன்.

திமுகவில் அண்ணா தலைமை பொறுப்பில் இருக்கும்போது அன்றைக்கு இருந்த காங்கிரஸ் திமுகவையோ, அண்ணாவையோ குறிவைத்து பேசவில்லை கருணாநிதியைதான் குறி வைத்து பேசினார்கள். கருணாநிதியை அடித்து சாலையோரத்தில் போட்டு விட்டோம் என்று சொன்னார்கள். இன்றைக்கு இறந்த பிறகும் கருணாநிதியைத்தான் குறி வைக்கிறார்கள் ஸ்டாலினை குறி வைக்கவில்லை.

திருமாவளவன்
கூலி படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள்... என்னங்க லோகேஷ் இதெல்லாம்? SPOILERS AHEAD

இதைச் சொல்லும்போதுதான் எம்ஜிஆர்க்கு பல கொள்கை இருக்கலாம். ஆனால் முதல் கொள்கை கருணாநிதி எதிர்ப்பு, அதே போல ஜெயலலிதாவுக்கும் முதல் கொள்கை கருணாநிதி எதிர்ப்பு. வைகோவின் முதல் கொள்கை கருணாநிதி எதிர்ப்பு. ஏன் இந்த திருமாவளவன் கூட முதன் முதலில் அரசியல் கட்சி ஆரம்பித்து எதிர்த்தது கருணாநிதியைதான். கருணாநிதி எதிர்ப்பு என்பது 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டு அரசியலில் மையப் பொருளாக இருக்கிறது என்பதை பேசினேன். கடந்த காலத்தில் நான் திமுகவை, திமுக தலைவரை எப்படி விமர்சித்திருக்கிறேன் என்பது பல பேருக்கு தெரியாது. அன்றைக்கு நான் தேர்தல் அரசியலில் கிடையாது. திமுக எதிர்ப்பு எனக்கும் இருந்தது. இன்றைக்கு தோன்றியிருக்கக்கூடிய விஜய் வரை திமுக எதிர்ப்பு உள்ளது என்றுதான் சொன்னேன்.

விடுதலை சிறுத்தைகளுக்கு எதிராக விமர்சனங்கள் வரும்போது இந்த இயக்கம் பாதிப்புக்கு உள்ளாகவில்லை. மூன்றாவது தலைமுறை வந்துவிட்டது. என்னை தாத்தா என்று அழைக்க கூடிய அளவிற்கு மூன்றாவது தலைமுறை வந்துவிட்டது. அண்ணன் என்றார்கள், அடுத்த தலைமுறை பெரியப்பா என்றார்கள். இந்த தலைமுறை தாத்தா என்று அழைக்கிறார்கள். ஆனால் இவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை உறுதிப்பட்டு நிற்கிறது. அதுதான் என்னுடைய சாதனை என்று நம்புகிறேன். அதுதான் எனக்கு பெருமை” என்று பேசினார்.

திருமாவளவன்
”மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டது திமுக அரசு; இது அராஜக..” - பத்திரிகையாளர் ஆர்.மணி காட்டம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com