ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் இன்று முதல் அமல்..பாஸை பெறுவது எப்படி?
ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம்
ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டம் இன்று முதல் அமலான சூழலில், அது எப்படி செயல்படும், யாருக்கு எல்லாம் பொருந்தும் என்பது குறித்து பார்க்கலாம். தினசரி நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோருக்காக ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் திட்டத்தை தேசிய சாலை போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. இந்த வருடாந்திர பாசின் விலை 3000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையில் பயனர்கள் 200 முறை சுங்கச்சாவடியை கடக்கலாம் அல்லது ஒரு வருடம் வரை பாசை பயன்படுத்த முடியும். இதில் எது முதலில் வருகிறதோ, அதுவரை இந்த பாஸ் செல்லுபடியாகும். கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற தனிப்பட்ட வணிக நோக்கமற்ற வாகனங்களுக்கு மட்டுமே ஃபாஸ்டேக்கின் வருடாந்திர பாஸ் பொருந்தும்.
யாருக்கு பொருந்தும்? பொருந்தாது?
பயனாளர்களின் ஃபாஸ்டேக் செயலி செயல்பாட்டில் இருக்க வேண்டும், வாகனங்களில் சரியான முறையில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும், செல்லுபடியாகும் வாகனப் பதிவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும், கருப்பு பட்டியலில் இருக்கக் கூடாது போன்ற விதிமுறைகள் உள்ளன. அதேநேரம், டாக்சிகள், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வணிக ரீதியான போக்குவரத்து வாகனங்களுக்கு இது பொருந்தாது.
பாஸ் பெறுவது எப்படி?
ஃபாஸ்டேக்கின் வருடாந்திர பாசை பெற பயனர்கள் ராஜ்மார்க் யாத்ரா செயலி அல்லது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது www.morth.nic.in ஆகியவற்றில் வாகன எண், பெயர், செல்போன் எண், ஏற்கனவே உள்ள ஃபாஸ்டேக் எண் ஆகியவற்றை பதிவு செய்து, கட்டணம் செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்வது எப்படி?
பாஸ் பெற்றதற்கான உறுதிப்படுத்துதல் குறுஞ்செய்தி மூலமாக பயனர்களுக்கு அனுப்பப்படும். வருடாந்திர பாஸ் திட்டம் மூலம் வழக்கமாக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்களின் சுங்க கட்டண செலவு ஆண்டுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும். மேலும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இதன்மூலம் குறைய வாய்ப்பு உள்ளது.
நீங்கள் ஒரு புதிய FASTag வருடாந்திர பாஸ் வாங்க வேண்டுமா?
இல்லை, உங்களிடம் ஏற்கனவே FASTag இருந்தால் புதிய FASTag வாங்க வேண்டிய அவசியமில்லை. வருடாந்திர பாஸ் உங்கள் தற்போதைய FASTag இல் செயல்படுத்தப்படலாம், அது தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வரை (வாகனத்தின் கண்ணாடியுடன் சரியாக இணைக்கப்பட்டிருத்தல், செல்லுபடியாகும் வாகனப் பதிவு எண்ணுடன்