திருப்பத்தூர்: தந்தையுடன் டிராக்டர் பயணம்... தவறி விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்!

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தை உழுது கொண்டிருந்த தந்தையுடன் சேர்ந்து டிராக்டரில் பயணித்த 1ஆம் வகுப்பு மாணவன், தவறி நிலத்தில் விழுந்துள்ளார். இதில் டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான்.
சிறுவன் மகவூ ராதே
சிறுவன் மகவூ ராதேதிருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாச்சார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக நிலம் உள்ள நிலையில், தனது விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது தனது 5 வயது மகன் மகவூ ராதேவையும் பக்கத்தில் உட்கார வைத்து கொண்டு டிராக்டரை ஓட்டி வந்துள்ளார்.

சிறுவன் மகவூ ராதே
தூர்ந்து போன பழவேற்காடு முகத்துவாரம்.. கிராம மக்கள் எடுத்த முடிவு.. தீர்வு கிடைத்ததா?

உழுதுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக, சிறுவன் டிராக்டரின் பின்பக்க இயந்திரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவன் மகவூ ராதே
சிறுவன் மகவூ ராதே

கிராமப்புரங்களில் பலரும் இதுபோன்று சிறுவர்களை டிராக்டரில் உட்கார வைத்து உழுது வரும் நிலையில், சிறுவன் டிராக்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இதுபோன்ற சமயங்களில் குழந்தைகளை டிராக்டரில் உட்கார வைக்க வேண்டாம் என்ற குரலும் வலுத்து வருகிறது.

சிறுவன் மகவூ ராதே
மலேசியாவில் சிக்கித் தவித்த இரு தமிழக இளைஞர்கள் பத்திரமாக மீட்பு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com