mahindran moorthipt desk
தமிழ்நாடு
மலேசியாவில் சிக்கித் தவித்த இரு தமிழக இளைஞர்கள் பத்திரமாக மீட்பு
மலேசியாவில் சிக்கித் தவித்த தமிழக இளைஞர்கள் பிரவாசி லீகல் செல் மலேசியா சாப்டர் மூலமாக மீட்டு தமிழகம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மகேந்திரன் மற்றும் சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் வேலைக்காக மலேசியா சென்றுள்ளனர். இந்நிலையில், வேலைக்கு வந்த இடத்தில் சரியாக சம்பளம் கிடைக்காமல் அவதியுற்றனர். இதையடுத்து ஆத்மேஷன் மூலமாக மலேசியாவில் வசிக்கும் தமிழக வழக்கறிஞர் ஜெயசீனை இளைஞர்கள் தொடர்பு கொண்டனர்.
passport copypt desk
இதைத் தொடர்ந்து தொழிலாளர் அலுவலகத்தில் முறையிட்டு அவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நஷ்டஈடாக பெற்றுக் கொடுத்ததோடு இன்று (19.11.2023) மலேசியா தலைநகர் கோலாலும்பூர் விமான நிலையத்தில் இருந்து திருச்சிக்கு திரும்ப உள்ளனர்.