உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்pt desk

வரம்பு மீறி செயல்படுகிறது | டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறைக்கு - உச்ச நீதிமன்றம் கண்டனம்

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: ராஜிவ்

டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக அமலக்கத் துறையினர் வழக்குப் பதிவு:

டாஸ்மாக் நிறுவனத்தின் சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு எதிராக அமலக்கத் துறையினர் சட்டவிரோத பணபரிவர்த்தனையின் கீழ் வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து, டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் அமலக்கத் துறையினர் கடந்த மார்ச் 6 முதல் 8ம் தேதி வரை சோதனை நடத்தினர். மேலும் டாஸ்மாக் தறுவனத்தில் உள்ள கணினி, மடிக்கணினி, பென் டிரைவ், சி.டி.க்கள் உள்ளிட்டவற்றை அமலககத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு:

அமலாக்கத் துறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது, அந்த மனுவை கடந்த ஏப்ரல் 8ம் தேதி தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக எதுவாக இருந்தாலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட அறிவுறுத்தியது. இதனையடுத்து, அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது, அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது,

உச்ச நீதிமன்றம்
சிங்கப்பூர் டூ கோவை | விமானத்தில் கடந்தி வந்த ரூ.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்

தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு:

இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி மீண்டும் தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. டாஸ்மாக், அமலக்கத்துறை சோதனை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனத்துக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள. கபில் சிபல் மற்றும் முகுல் ரோத்தஹி ஆகியோர், கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழக அரசு, தனி நபர்கள் பணம் பெற்றது தொடர்பாக 44 வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறது, ஆனால் அமலக்கத்துறை தற்போது தான் வழக்கில் வந்துள்ளனர்.

Madras high court
Madras high courtpt desk

அமலக்கத் துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்:

ஒரு அலுவலகத்தில் அத்துமீறி அதன் செயல்பாட்டை முடக்கும் விதமாக கணினி, பென் டிரைவ் உள்ளிட்ட அனைத்தையும் அமலக்கத் துறையினர் முடக்கினர். அதேபோல டாஸ்மாக் நிர்வாக அனைத்து ஊழியர்களின் தொலைபேசிகள் ஒட்டுகேட்கப்பட்டு வருகிறது. இது தனிநபரின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது, எனவே இது தொடர்பாகவும் உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் அதே வேளையில், தனிப்பட்ட நபர்கள் செய்த குற்றத்திற்காக அவர்கள் மீது தமிழக அரசே நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அமலக்கத்துறை டாஸ்மாக் அலுவலகத்திற்கு வந்து இதுபோன்று நடந்துள்ளனர், இது எந்த வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியது, அமலக்கத் துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தனர்

உச்ச நீதிமன்றம்
சல்லடை போடும் அமலாக்கத்துறை.. பினாமி நிறுவனமா டான் பிக்சர்ஸ்? யார் இந்த ஆகாஷ் பாஸ்கரன்?

தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா?

அந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள், தனி நபர்கள் செய்த விதி மீறலுக்காக ஒட்டுமொத்தமாக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என கேள்வி எழுப்பி அமலக்கத்துறை வரம்பு மீறி நடக்கிறது என கண்டனம் தெரிவித்தனர். மேலும், முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம். ஆனால், ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி நீங்கள் விசாரிக்க முயற்சிப்பீர்கள்? என வினவியதோடு, அமலக்கத்துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது, வரம்பு மீறி அமலக்கத்துறை செயல்படுகிறது என மீண்டும் கண்டனத்தை பதிவு செய்தனர். அமலாக்கத் துறையானது அனைத்து எல்லையையும் தாண்டி செயல்பட்டு கூட்டாட்சி அமைப்பை சிதைத்துள்ளது என கூறினர்.

supreme court
supreme courtpt desk
உச்ச நீதிமன்றம்
நிதி ஆயோக் கூட்டம் | முதல்வர் ஸ்டாலின் - இபிஎஸ் இடையே முற்றும் வார்த்தைப் போர்!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விவகாரத்தில், அமரக்கத் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதித்து ஆணையிட்டு, தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க அமலக்கத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உத்தரவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கு மீதான அடுத்த விசாரணையை உச்ச நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறைக்கு பின்னர் ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com