சிங்கப்பூர் டூ கோவை | விமானத்தில் கடந்தி வந்த ரூ.5 கோடி மதிப்புள்ள உயர்ரக கஞ்சா பறிமுதல்
செய்தியாளர்: பிரவீண்
வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கோவை விமான நிலையம் வந்த சிங்கப்பூர் பயணிகளிடம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவரின் பையை சோதனையிட்டனர். அதில், சுமார் 5 கிலோ உயர்ரக கஞ்சாவான hydroponic weed (ganja) இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியே அந்த பயணி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 5.25 கிலோ மதிப்பிலான உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் யாரிடமிருந்து வாங்கி வந்தார் இங்கே யாரிடம் கொடுக்க இருந்தார் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.