கிருஷ்ணகிரியில் வீரப்பன் மகள் - விழுப்புரத்தில் மு.களஞ்சியம்.. வெளியானது நாதக வேட்பாளர் பட்டியல்!

சென்னை பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களையும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்துவைத்தார்.
வேட்பாளர்களுடன் சீமான்
வேட்பாளர்களுடன் சீமான்ட்விட்டர்

நாடு முழுவதும் ஜனநாயகப் பெருவிழா தொடங்கியுள்ளது. தமிழகத்தில் முதல்கட்டமாக அனைத்துத் தொகுதிகளிலும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனைப் போட்டி (திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி) நிலவுகிறது. இதில் சீமானின் நாம் தமிழர் கட்சியைத் தவிர பிற கட்சிகள் எல்லாம் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. தவிர, வேட்பாளர்களை அறிவித்து பரப்புரையிலும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியும் இன்று (மார்ச் 23) அனைத்துத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

சென்னை பல்லாவரத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் நாம் தமிழர் கட்சியின் 40 வேட்பாளர்களையும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்துவைத்தார். மொத்தம் 20 ஆண்கள், 20 பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் சீமான் போட்டியிடாத நிலையில் பல முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், கிருஷ்ணிகிரியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிக்க: 2009-ல் தொடங்கிய பயணம்..தவிர்க்க முடியாத இடத்தில் 'நாம் தமிழர் கட்சி’ - சிக்கலாகுமா சின்னம் பிரச்னை?

வேட்பாளர்களுடன் சீமான்
”தேசிய மலரான தாமரையை பாஜகவுக்கு சின்னமாக ஒதுக்கியது ஏன்? வழக்கு போடுவோம்” - சீமான் குற்றச்சாட்டு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல்

திருவள்ளூர் - மு.ஜெகதீஷ் சந்தர்

வடசென்னை - டாக்டர் அமுதினி

தென் சென்னை - முனைவர் சு.தமிழ்ச்செல்வி

மத்திய சென்னை - இரா.கார்த்திகேயன்

திருப்பெரும்புதூர் - டாக்டர் வெ.இரவிச்சந்திரன்

காஞ்சிபுரம் - வி.சந்தோஷ்குமார்

அரக்கோணம் - பேராசிரியர் அப்சியா நஸ்ரின்

வேலூர் - தி.மகேஷ்குமார்

கிருஷ்ணகிரி - தாளாளர் வித்யாராணி வீரப்பன்

தருமபுரி - டாக்டர் அபிநயா பொன்னிவளவன்

திருவண்ணாமலை - டாக்டர் இரா.இரமேஷ்பாபு

ஆரணி - டாக்டர் கு.பாக்கியலட்சுமி

விழுப்புரம் - இயக்குநர் மு.களஞ்சியம்

கள்ளக்குறிச்சி - இயக்குநர் ஆ.ஜெகதீசன்

சேலம் - டாக்டர் க.மனோஜ்குமார்

நாமக்கல் - க.கனிமொழி

ஈரோடு - டாக்டர் மு.கார்மேகன்

திருப்பூர் - மா.கி.சீதாலட்சுமி

நீலகிரி - ஆ.ஜெயக்குமார்

கோயம்புத்தூர் - ம.கலாமணி ஜெகநாதன்

பொள்ளாச்சி - டாக்டர் நா.சுரேஷ்குமார்

திண்டுக்கல் - டாக்டர் கயிலைராஜன்

கரூர் - டாக்டர் ரெ.கருப்பையா

திருச்சி - ஜல்லிக்கட்டு ராஜேஷ்

பெரம்பலூர் - இரா. தேன்மொழி

கடலூர் - வே.மணிவாசகன்

சிதம்பரம் - இரா.ஜான்சிராணி

மயிலாடுதுறை - பி.காளியம்மாள்

நாகப்பட்டினம் - மு.கார்த்திகா

தஞ்சாவூர் - ஹூமாயூன் கபீர்

சிவகங்கை - வி.எழிலரசி

மதுரை - முனைவர் மோ.சத்யாதேவி

தேனி - டாக்டர் மதன் ஜெயபாலன்

விருதுநகர் - டாக்டர் சி.கௌசிக்

ராமநாதபுரம் - டாக்டர் சந்திரபிரபா ஜெயபால்

தூத்துக்குடி - டாக்டர் ரொவினா ரூத் ஜேன்

தென்காசி - சி.ச.இசை மதிவாணன்

திருநெல்வேலி - பா.சத்யா

கன்னியாகுமரி - மரிய ஜெனிபர்

புதுச்சேரி - டாக்டர் இரா.மேனகா

இதையும் படிக்க: இமாச்சல்: தகுதிநீக்கம் செய்யப்பட்ட 6 காங். எம்எல்ஏக்கள்.. பாஜகவில் ஐக்கியம்.. தேர்தலில் போட்டி?

வேட்பாளர்களுடன் சீமான்
”என் சின்னத்தை பறிப்பதற்கு பின் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது; எனக்கு நெருக்கடி கொடுக்கவே..” – சீமான்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com