\
வீடியோ கேம் விளையாடிய மாணவர்
வீடியோ கேம் விளையாடிய மாணவர் புதிய தலைமுறை

வீடியோ கேம் விளையாடியபோது நேர்ந்த விபரீதம்.. திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்ட மாணவன்!

வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடிய 18 வயது மாணவருக்கு திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த காலிவாரி கண்டிகை பகுதியைச் சேர்ந்த தீபன், 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் தற்போது தனது தாயுடன் வசித்து வருகிறார். இவரது தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அண்ணன் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தாயுடன் வீட்டில் இருந்து வருகிறார் தீபன்.

தீபன் எப்போதும் வீட்டில் தனியாக வீடியோ கேம் விளையாடுவார் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் வரை நன்றாக இருந்த தீபன் நேற்றைய தினம் திடீரென்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போன்று நடந்து கொண்டுள்ளார். இதனால் வீட்டில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வீடியோ கேம் விளையாடிய மாணவர்
வந்தே பாரத் ரயிலில் இவ்வளவு வசதிகளா? - படங்களை வெளியிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற உறவினர்கள் மற்றும் பெற்றோர் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் தீபன்.

மேலும், பாதிக்கப்பட்ட மாணவனை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸில் கை, கால்கள் கட்டப்பட்டு அழைத்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ கேம் விளையாடிய மாணவர்
நீலகிரி: கோயில், பள்ளிவாசலில் நடிகர் யோகி பாபு வழிபாடு! #ViralVideo
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com