நீலகிரி: கோயில், பள்ளிவாசலில் நடிகர் யோகி பாபு வழிபாடு! #ViralVideo

குன்னூர் ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயிலுக்கும், 100 ஆண்டுகள் பழமையான பெரிய பள்ளி வாசலுக்கும் சென்று நடிகர் யோகி பாபு சாமி கும்பிட்டார். தகவல் அறிந்து ரசிகர்கள் குவிந்ததால், உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.
நடிகர்  யோகி
நடிகர் யோகி PT

நடிகர் யோகிபாபு, நேற்று இரவு தன் நண்பர்களுடன் குன்னூர் சென்றுள்ளார். அங்கு புகழ்பெற்ற ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயிலுக்கு சென்ற அவர், விளக்கேற்றி காணிக்கை செலுத்தி அம்மனை தரிசனம் செய்தார்.

ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயில்
ஸ்ரீ தந்தி மாரியம்மன் கோயில்PT

இதனை தொடர்ந்து கோயில் அருகில் உள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய பள்ளி வாசலுக்கு சென்று அங்கு தொழுகை நடத்தும் இடத்தில் மண்டியிட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

குன்னூர் பள்ளிவாசல்
குன்னூர் பள்ளிவாசல்PT

யோகி பாபு கோயில், பள்ளி வாசலுக்கு வந்திருக்கும் செய்தி வேகமாக பரவியதால் அவரை காண ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. இதனால் அவர் சில நிமிடங்கள் வரை ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்தார். பல ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

நடிகர்  யோகி
“இளம் தலைமுறையினருக்கு வழிகாட்ட நடராஜன் போல் ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்” - யோகி பாபு

பின் யோகி பாபு அங்கிருந்து சென்றுவிடவே, யோகி பாபுவின் நண்பர் நம்மிடையே கூறுகையில்,"தற்போது யோகி பாபுவுக்கு படவாய்ப்புகள் அதிகளவில் வருகிறது. எந்த இடையூறுகளும் இல்லாமல் நல்ல முறையில் நடிப்புத்துறையில் முன்னேற வேண்டும், இனியும் பட வாய்ப்புகள் அதிக அளவில் வர வேண்டும்.

இதற்காகவே நீலகிரி மாவட்டம் குன்னூரில் புகழ்பெற்ற ஸ்ரீ தந்திமாரியம்மன் கோயில் மற்றும் 100ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பெரிய பள்ளிவாசலுக்கு வந்திருக்கிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com