வந்தே பாரத் ரயிலில் இவ்வளவு வசதிகளா? - படங்களை வெளியிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

வந்தே பாரத் ரயிலின் படுக்கை வசதிகொண்ட பெட்டிகளின் புகைப்படங்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார். தமது X சமூகவலைதள பக்கத்தில், வந்தே பாரத் ரயிலின் உள்கட்டமைப்பு படங்களை அவர் பதிவிட்டுள்ளார்.
Vande Bharat sleeper coach
Vande Bharat sleeper coachX Page

குளிரூட்டப்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் புகைப்படங்களை பதிவிட்டதோடு, 2024ஆம் ஆண்டு அவை தொடக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்.

குளிர்சாதனப் பெட்டிகளில் அழகிய வேலைபாடுகள், ரயில் கூரையில் உள் பொதிக்கப்பட்ட விளக்குகள், மேல்படுக்கையில் ஏற ஏணி அமைப்பு மற்றும் அகலமான ஜன்னல் வசதி என இந்த ஸ்லீப்பர் கோச்களின் வடிவமைப்பு உலகத்தரத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vande Bharat sleeper coach
மதுரை: வந்தே பாரத் ரயிலுக்காக 46 வருட வைகை எக்ஸ்பிரஸின் நேரத்தை மாற்றுவதா – பயணிகள் கடும் எதிர்ப்பு!

இதற்காக தற்போது இருக்கும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளின் உள்புறத்தை மட்டும் மாற்ற வேண்டும் என்பதால் பணிகள் விரைவாக நிறைவு பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரயில் பெட்டிகள் மற்றும் மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்பில் அனுபவம் பெற்ற பி.இ.எம்.எல் நிறுவனம் பெங்களூருவில் உள்ள தமது தொழிற்சாலையில் பெட்டிகளை தயாரிக்க உள்ளது. மேற்கு வங்கத்திலும் சில பெட்டிகள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com