police jayakumar
police jayakumarpt

வாணியம்பாடி: சிறை வளாகத்திலேயே மது அருந்திய தலைமை காவலர்.. வீடியோ வைரலானதால் பாய்ந்த நடவடிக்கை!

வாணியம்பாடி கிளை சிறையில் தலைமை காவலாராக பணியாற்றும் காவலர், சிறை வாளாகத்திலேயே மது அருந்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட சிறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
Published on

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசினர் தோட்ட வளாகத்தில் வாணியம்பாடி கிளைச்சிறைசாலை உள்ளது. இந்த சிறையில் தற்போது 35 கைதிகள் உள்ள நிலையில், ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 காவலர்கள் சுழற்சி முறையில் சிறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த கிளைச்சிறைசாலையில் தலைமை காவலராக பணியாற்றும் ஜெயகுமார் என்பவர், சிறையில் உள்ள கைதிகளை பார்க்க வரும் கைதிகளின் உறவினர்களிடம் பணம் பெறுவதாகவும், மேலும் அவர்களை இரவு நேரங்களில் மதுபாட்டில்கள் வாங்கி வர கூறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

police jayakumar
“உன்னை விட சாமி இல்ல..”- இசையமைப்பாளர் டி.இமானின் கவனத்தை ஈர்த்த சிறுமியின் குரல்..!

தொடர்ந்து, ஜெயகுமார் பணியில் இருக்கும் போதே சிறைசாலை வளாகத்தில் மது அருந்தி கொண்டிருக்கும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இந்த விவகாரத்தில் ஜெயகுமார் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சிறை துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட சிறை காவல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், ஜெயகுமாரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

police jayakumar
“தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை” - மியாட் மருத்துவமனை அறிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com