“உன்னை விட சாமி இல்ல..”- இசையமைப்பாளர் டி.இமானின் கவனத்தை ஈர்த்த சிறுமியின் குரல்..!

பிரபல இசையமைப்பாளர் டி. இமான் இசையில் பாடவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவி ஒருவர் தனது மெல்லிய குரலில் ‘அப்பா’ குறித்து பாடிய கிராமிய பாடல் தொடர்பான வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளத்தில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து அந்த மாணவியின் விவரம் கேட்டு பிரபல இசையமைப்பாளர் இமான் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருந்தார். இதை புதிய தலைமுறை, நமது சமூக வலைதளப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

இந்நிலையில் அந்த மாணவி விழுப்புரம் மாவடத்திலுள்ள திண்டிவனம் அடுத்த அம்மனம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகளான தர்ஷினி என்பதும், அவர் அனந்தமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்தது.

மாணவி தர்ஷினி - டி.இமான்
ஆட்சியரின் அலட்சியம்? கைக்குழந்தையுடன் காத்திருந்த மக்கள்; பிளாஸ்டி பாட்டிலில் தேநீர் குடித்த அவலம்!

இதையடுத்து மாணவி தர்ஷினியின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட இசையமைப்பாளர் இமான், தர்ஷினிக்கு தனது இசையில் பாடுவதற்கு வாய்ப்பு தருவதாக அவரது தந்தை ராஜ்குமாரிடம் தெரிவித்துள்ளார்.

மாணவி தர்ஷினி
மாணவி தர்ஷினிபுதிய தலமுறை

இமானின் இந்த வார்த்தைகள் தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக மாணவி தர்ஷினி கூறியுள்ளார். இமான் இசையில் பாடவுள்ள மாணவி தர்ஷினியின் தந்தை ராஜ்குமார் நாட்டுப்புற இசை கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com