சீமான்
சீமான்pt

பத்திரிக்கையாளர்களிடம் வாக்குவாதம்.. ஆவேசமாக அடிக்கப்பாய்ந்த சீமான்! செஞ்சியில் பரபரப்பு

செஞ்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் பத்திரிக்கையாளர்களிடம் சீமானின் பவுன்சர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Published on

பத்திரிகையாளர்களிடம் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பவுன்சர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதை மேடையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த சீமான், பிரச்சனையை பேசி தீர்க்காமல் அவரும் அடிப்பது போல் கீழே இறங்கி வந்ததால் மேலும் பிரச்னை தீவிரமடைந்தது. பின்னர் செஞ்சி போலீசார் பத்திரிகையாளர்களை பத்திரமாக மீட்டு சென்றனர்.

சீமான்
’தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது..’ - திருமாவளவன் மாற்றுக் கருத்து

என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தற்போது யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக செஞ்சிக்கோட்டை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்வேறு தரப்பினர் செஞ்சி கோட்டையை தமிழர்களின் பாரம்பரியமான கோட்டை எனவும் மராட்டிய மன்னருக்கு சொந்தமான கோட்டை இல்லை என்றும் பல்வேறு போராட்டங்களை அறிவித்து நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையிலான கோனேரிக்கோனுக்கு சொந்தமான கோட்டை என்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செய்திசேகரிக்க சென்ற செய்தியாளர்களை அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீமான்
சீமான்
சீமான்
’தூய்மை தொழிலில் பணி நிரந்தரம் வேண்டாம்; அது குலத்தொழிலை ஊக்குவிக்கும்’ - ஆதித்தமிழர் பேரவை

இதனை அடுத்து செய்தியாளர்கள் பவுன்சர்களிடம் செய்தி சேகரிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர். இதனை மறுத்த பவுன்சர்கள் செய்தியாளர்களிடம் தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேற முயற்சித்த போது, நாதக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் இருந்து கீழே இறங்கி அடிப்பது போல வேகமாக சென்றது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த செஞ்சி காவலர்கள் அப்பகுதிக்கு வந்து பிரச்சனையிலிருந்து செய்தியாளர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

சீமான்
சீமான்

கட்சித் தலைவர் கூட்டத்தில் ஏற்படுகின்ற பிரச்சினையை சமாதான பேச்சு வார்த்தை ஏற்படுத்தி தீர்வுகாணாமல், மேடையில் இருந்து தாக்க முயற்சிப்பது போல் இறங்கி வந்த சீமானின் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீமான்
”பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்துவிட்டார்..” - எல்.முருகன் விமர்சனம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com