”பட்டியலின மக்களுக்கு திருமாவளவன் துரோகம் செய்துவிட்டார்..” - எல்.முருகன் விமர்சனம்
தமிழகத்தில் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளும் யாத்திரையை பார்த்து முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார், தி.மு.க.வில் இருந்து மிகப்பெரிய தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளனர் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.
திருமாவளவன் துரோகம் செய்துவிட்டார்..
தமிழ்நாட்டின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு தவறானது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிற 22-ம் தேதி தமிழகம் வருகிறார். அமலாக்கத்துறை சுதந்திரமான அமைப்பு அவர்கள் தங்களது வேலையை செய்கிறார்கள்...
தமிழகத்தில் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளும் யாத்திரையை பார்த்து முதல்வர் பயப்படுகிறார்..
தூய்மைப்பணியாளர்கள் விவகாரத்தில் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் திருமாவளவன் நிலையாக இல்லை. பட்டியிலன மக்களுக்கு திருமாவளவன் மிகப்பெரிய துரோகம் இழைத்து வருகிறார். பட்டியலின மக்கள் மீது சிறிதளவும் அவருக்கு அக்கறை இல்லை. கேள்வி கேட்டால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என பயப்படுகிறார்.
தி.மு.க.வில் இருந்து மிகப்பெரிய தலைவர்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளனர். நீங்கள் பார்க்க தான் போகிறீர்கள். தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லை. பட்டியிலின மாணவர்களுக்கான சிறப்பு பள்ளிகள் மற்றும் விடுதியிலும் உரிய வசதி இல்லை என்று விமர்சித்தார்.