கோவை நகைக்கடை கொள்ளை: 3 கிலோ நகைகள் பறிமுதல், கொள்ளையனின் மனைவி கைது! வெளியான அதிர்ச்சி தகவல்கள்!

"இதுவரை 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளோம். விவகாரத்தில் விஜய்யின் நண்பர் சுரேஷிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இது ஒரு திட்டமிட்ட கொள்ளையாகவே தெரிகிறது"
vijay
vijay pt

கோவை மாவட்டத்தில் 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 28ம் தேதி 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்த நிலையில், கொள்ளையன் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதற்கிடையே மறைத்து வைத்திருந்த நகைகளில் ஒரு பகுதி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

எவ்வளவு நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, குற்றவாளியை பிடிப்பதில் உள்ள சிக்கல், விசாரணையின் தற்போதைய நிலைகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது, “கொள்ளையில் ஈடுபட்ட தருமபுரியை சேர்ந்த விஜய், இன்னும் கைது செய்யப்படவில்லை. கொள்ளையில் அவரது மனைவியும் சம்பந்தப்பட்டுள்ளார். இதுவரை 3 கிலோ அளவுக்கு தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினம் கைப்பற்றப்பட்டுள்ளது. கொள்ளையன் மீது கம்பைநல்லூர், கோவை RS புரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளன. எப்படி நகைக்கடைக்குள் செல்ல முடிந்தது என்பது குறித்து கைதான பிறகுதான் தெரியும்.

vijay
ஸ்கெட்ச் போட்டு ரவுண்டப்!பாலினம் கண்டறியும் கருவியுடன் சிக்கிய 10ம் வகுப்பு வரை படித்த ’பலே டாக்டர்’

வழக்கில் கொள்ளையன் விஜய் மனைவி மீது எந்த வழக்கும் இல்லை எனினும், இந்த விவகாரத்தில், நகையை பதுக்கி வைத்தல், விஜய்யை தப்பவைத்தல் போன்றவற்றில் சம்மந்தப்பட்டுள்ளார். அதனால் அவரை கைது செய்துள்ளோம். இதுவரை 300 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளோம். விவகாரத்தில் விஜய்யின் நண்பர் சுரேஷிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இது ஒரு திட்டமிட்ட கொள்ளையாகவே தெரிகிறது. விஜய்யின் முந்தைய குற்றச் செயல்கள் பணத்திருட்டுகள்தான். ஆனால், இந்தமுறை நகைத்திருட்டில் ஈடுபட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்.

vijay
இராமநாதபுரம்: மாத்திரை வாங்க வந்த மூதாட்டிக்கு மயக்க மாத்திரை கொடுத்து கைவரிசை காட்டிய பெண்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com