இராமநாதபுரம்: மாத்திரை வாங்க வந்த மூதாட்டிக்கு மயக்க மாத்திரை கொடுத்து கைவரிசை காட்டிய பெண்!

இராமநாதபுரத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாத்திரை வாங்க வந்த மூதாட்டிக்கு மயக்க மாத்திரை கொடுத்துத் தங்க நகையைப் பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
மூதாட்டியை அழைத்து செல்லும் பெண்
மூதாட்டியை அழைத்து செல்லும் பெண்file image

இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தேவிப்பட்டினம் அருகே உள்ள மேட்டுக்கொல்லை பகுதியைச் சேர்ந்த முனியம்மாள் என்பவர், மாதாந்திர மாத்திரைகள் வாங்க மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு மருத்துவரிடம் உடல் பரிசோதனை செய்துவிட்டு, மாத்திரைகள் வாங்க மருத்துவமனை சென்றுள்ளார் அவர். பின் புதிய கட்டடத்தில் முதல் தளத்தில் உள்ள ஃபார்மஸிக்கு செல்லுமாறு மருத்துவர் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மூதாட்டியை அழைத்து செல்லும் பெண்
டிச. 1 முதல் 5 வரை.. மழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வுமையம் பட்டியலிட்டுள்ள மாவட்டங்கள் என்னென்ன?

இதனையடுத்து அங்கிருந்த நபர்களிடம் வழி கேட்டுச் சென்றுள்ளார். அங்கு அடையாளம் தெரியாத 40வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்து கொண்டு முனியம்மாளிடம் வந்து "என்னைத் தெரிகிறதா" என அறிமுகம் செய்து கொண்டு மாத்திரைகள் வழங்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மூதாட்டியை அழைத்து செல்லும் பெண்
கள்ளக்குறிச்சி : பயணிகளின் உயிரைக் காப்பாற்றிவிட்டு தன் உயிரைவிட்ட அரசு பேருந்து ஓட்டுநர்!

இதனைதொடர்ந்து மருந்து சீட்டிற்கு உண்டான மாத்திரைகளை வாங்கி கொடுத்துள்ளார். பின்னர் அந்த மூதாட்டியை ஒரு இடத்தில் அமர வைத்து ஒரு மாத்திரையைக் கொடுத்துச் சாப்பிடச் சொல்லியதாகக் கூறப்படுகிறது. மாத்திரையை வாங்கி சாப்பிட்ட சில வினாடிகளிலேயே மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். உடனே மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்க செயின், காதில் அணிந்திருந்த தோடு, கையில் அணிந்திருந்த மோதிரம் என அனைத்தையும் கழற்றிக் கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்

பின்னர் நீண்ட நேரம் கழித்து மூதாட்டி கண் விழித்துப் பார்த்த போது, தான் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக தனது மகளுக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

மூதாட்டியை அழைத்து செல்லும் பெண்
பாகிஸ்தான் சென்று முகநூல் நண்பரை திருமணம் செய்த இந்தியப் பெண், மீண்டும் இந்தியா வருகை!

இச்சம்பவம் குறித்து ராமநாதபுரம் நகரக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த பெண் ரோஸ் கலர் சேலையும் முகத்தில் மாஸ்க்கும் அணிந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தப்பியோடிய அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் மயக்க மாத்திரை கொடுத்துத் தங்க நகைகளைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com