ஸ்கெட்ச் போட்டு ரவுண்டப்!பாலினம் கண்டறியும் கருவியுடன் சிக்கிய 10ம் வகுப்பு வரை படித்த ’பலே டாக்டர்’

கள்ளக்குறிச்சியில் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு கர்ப்பிணிப் பெண்களுக்குக் கருக்கலைப்பு செய்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்
கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்file image

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது வீட்டில், கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதைக் கண்டறியும் ஸ்கேன் கருவி வைத்து பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்து வருவதாக மாநில பாலினம் தேவை தடை செய்தல் சட்ட கண்காணிப்புக் குழுவுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் மாநில சுகாதாரத்துறையினர் மற்றும் கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி சரவணகுமார் தலைமையிலான போலீசார் காட்டுக்கொட்டாய் பகுதிக்குச் சென்றனர்.

இதனையடுத்து முருகேசன் வீட்டின் எதிரே மறைந்திருந்த அதிகாரிகள் முருகேசன் தனது காரில் இரண்டு கர்ப்பிணிப் பெண்களுடன் வந்து இறங்கி வீட்டுக்குள் சென்றுள்ளார். பின்னர் அந்த கர்ப்பிணிப் பெண்களுக்குப் பாலினம் அறிதல் தொடர்பாக ஸ்கேன் செய்த போது வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள் முருகேசனை கையும் களவுமாகப் பிடித்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கண்ட கர்ப்பிணிப் பெண்கள் அங்கிருந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்குப் பாலினம் அறிதல் தொடர்பாக ஸ்கேன் செய்த போது வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள் முருகேசனை கையும் களவுமாகப் பிடித்தனர்
கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்
இராமநாதபுரம்: மாத்திரை வாங்க வந்த மூதாட்டிக்கு மயக்க மாத்திரை கொடுத்து கைவரிசை காட்டிய பெண்!

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, " இங்கு வந்திருந்த இரு பெண்களும் தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பெண்கள். இது போல் பல மாவட்டங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்கள் பாலினம் அறிதல் மற்றும் கருக்கலைப்பு செய்வதற்கு இங்கே வந்து செல்கின்றனர். கருக்கலைப்பிற்கு வரும் பெண்களிடம் 15 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்
பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு கார்
கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்
வீட்டில் இருந்து கடத்தப்பட்ட சிறுமிக்கு நேர்ந்த சோகம் - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

பாலினம் அறிதல் மற்றும் கருக்கலைப்பு செய்யப் பெண்களை அழைத்து வருவதற்கு ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கமிஷன் வழங்கப்படுகிறது. 10வது மட்டுமே படித்து மருத்துவம் பார்ப்பது. இது போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த முருகேசனை ஒரு மாத காலமாகப் பின் தொடர்ந்து இன்று கைது செய்துள்ளோம்" என்றனர்.

போலி மருத்துவர்  முருகேசன் வீடு
போலி மருத்துவர் முருகேசன் வீடு
கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்
தொடரும் கனமழை... பல மாநிலங்களுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

இதனையடுத்து முருகேசன் வீட்டிலிருந்து பாலினம் கண்டறிதல் ஸ்கேன் கருவி மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர் பயன்படுத்தி வந்த இரண்டு சொகுசு கார்கள் மற்றும் பைக் ஆகியவற்றை போலீசார்  பறிமுதல் செய்தனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் நான்கு பிரிவின் வழக்குப் பதிவு செய்து முருகேசனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

முருகேசன்
முருகேசன்

மேலும் இதே குற்றத்திற்காக முருகேசன் 3 முறை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com