தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன துறைக்கு எத்தனை கோடி முதலீடு
தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன துறைக்கு எத்தனை கோடி முதலீடுpt

இடைக்கால பட்ஜெட்| என்னென்ன துறைக்கு எத்தனை கோடிகள் ஒதுக்கீடு..? முழு விவரம்!

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வித்துறை, ஊரக மற்றும் நகர வளர்ச்சித்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கு என மொத்தமாக 50000 கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

தமிழ்நாடு அரசின் 2026-27 இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி, சிறப்பு திட்ட செயலாக்கம், பொதுப்பணி, தொழில், தகவல் தொழில்நுட்பம், நீர்வளம், எரிசக்தி, போக்குவரத்து, மின்சாரம், நெடுஞ்சாலை, ஆதி திராவிடர் நலன், சுற்றுலா, கால்நடை, மீன்பிடித்தல் உள்ளிட்ட துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் இந்த பட்ஜெட் வழக்கமான முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக அமைகிறது.

2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்pt

இடைக்கால பட்ஜெட்டில் புதிய அரசு அமைவது வரையிலான அரசின் செலவினங்களுக்கான நிதிஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்படும். பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன துறைக்கு எத்தனை கோடி முதலீடு
சினிமாவில் அறிமுகமாகும் தமிழ்நாடு அரசியல்வாதி மகள்! | Emaya | Heartin

என்னென்ன துறைக்கு எத்தனை கோடி முதலீடு..?

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் உயர்கல்வித்துறை, ஊரக மற்றும் நகர வளர்ச்சித்துறை, சிறப்பு திட்ட செயலாக்க துறை உள்ளிட்ட பல்வேறு துறைக்கு பல்லாயிரம் கோடி அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

  • உரையில் பேசிய நிதியமைச்சர், அனைத்து சமூகத் திட்டங்களுக்கும் சேர்த்து நிதிநிலை அறிக்கையில் 5463 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • உயர்கல்வி - உயர்கல்வித்துறைக்கு 8505 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது

  • செயலாக்கம் - 17088 கோடி ரூபாய் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

  • பொதுப்பணி - பொதுப்பணித்துறைக்கு 1694 கோடி ரூபாய் ஒதுக்கீடு. கோயம்புத்தூர் திருச்சி கடலூர் சேலம் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு உள்ளது.

  • தொழில் - 1943 கோடி ரூபாய் சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ஒதுக்கீடு.

  • தகவல் தொழில்நுட்பம் - தகவல் தொழில்நுட்பத்துறைக்கு 219 கோடி ஒதுக்கீடு.

  • நீர்வளம் - நீர்வளத்துறைக்கு 10,076 கோடி ஒதுக்கீடு. சென்னைக்கு அருகே திருப்போரில் 342 கோடி மதிப்பீட்டில் மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் புதிய நீர்த்தேக்கத்திற்கு முதல்வர் அண்மையில் அடிக்கல் நாட்டியுள்ளார்.

  • எரிசக்தி - எரிசக்தி துறைக்கு 18,091 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன துறைக்கு எத்தனை கோடி முதலீடு
இடைக்கால பட்ஜெட்| ”மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு அதிகாரம்” - தங்கம் தென்னரசு!
  • போக்குவரத்து - போக்குவரத்து துறைக்கு 13062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால வரவு செலவுத் திட்டம் மதிப்பீடுகளில் மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக 4000 கோடி ஒதுக்கீடு. மாணவர்கள் பேருந்து பயண கட்டணம் திட்டத்திற்காக 1782 கோடி ரூபாய், டீசல் மானியத்திற்காக 1857 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

  • மின்சாரம் - மின்சாரத்துறைக்கு 18091 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

  • நெடுஞ்சாலை - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21132 கோடி ரூபாய் ஒதுக்கீடு. தற்போது தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 621 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம். 45 கோடி மதிப்பீட்டின் மடிப்பாக்கத்தில் வாகன சுரங்கப்பாதை மற்றும் மதுரை கோரிப்பாளையத்தில் 199 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பட்டு பணிகளும் நடைபெற்ற வருகிறது.

  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் - பழங்குடியின மக்களின் குடியிருப்பு உள்கட்டமைப்பு மேம்பாடுக்காக 300 கோடி ஒதுக்கீடு, பழங்குடியினர் வீடு கட்டுமான பணிகள் மேற்கொள்ள 755 கோடி ரூபாய் ஒதுக்கீடு, மொத்தமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 3934 கோடி ஒதுக்கீடு. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் 420 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

  • இந்து சமய அறிநிலையத்துறை - 8100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 4100 கோயில்களில் குடமுழுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1048 கோயில்களுக்கு சொந்தமான - 8163 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

  • சிறுபான்மை - பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு சேர்த்து 1,634 கோடி ஒதுக்கீடு.

  • சுற்றுலா - சுற்றுலா துறைக்கு 1394 கோடி ஒதுக்கீடு. அதிகம் அறியப்படாத 22 சுற்றுலாத்தலங்கள 100 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. பூம்புகார் நகரம் 22 கோடியில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையில் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. சுற்றுலாவுக்காக 30.79 கோடி பேர் தமிழ்நாடு வந்துள்ளனர்.

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன துறைக்கு எத்தனை கோடி முதலீடு
இடைக்கால பட்ஜெட்| ”சிறு குறு தொழில்களுக்கு முக்கியத்துவம்; AI திறன் முன்னேற்றம்” - தங்கம் தென்னரசு!
  • கால்நடை - கால்நடை , பால்வளம் மீன்வளத்துறைக்கு 4435 கோடி ஒதுக்கீடு.

  • மீன்பிடித்தல் - ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கச்சிமடம் பகுதியில் மீன் பிடித்து துறைமுகம் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பாம்பன் பகுதியில் 58 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் குந்துகால் பகுதியில் மீன் பிடி இறங்குதல் 148 கோடி ரூபாய் மதிப்பீட்டில் என மொத்தம் 356 கோடி செலவு மேற்கண்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

  • போதைப்பொருள் ஒழிப்பு - போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் அதன் விழிப்புணர்வுக்காக பல்வேறு துறைகளில் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த ஒரு இயக்கம் மேலாண்மை உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுமார் 17000 போதை எதிர்ப்பு மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

  • புதிய டைடல் பூங்கா - 1070 கோடி முதலீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் திருச்சிராப்பள்ளி, மதுரை, ஒசூர் ஆகிய நகரங்களில் நிறுவப்பட்டு வருகின்றன.

  • டைடல் நியோ மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் - விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, திருப்பூர் ஆகிய 7 நியோ டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.

  • நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 நியோ டைடல் பூங்காக்கள் ரூ.388 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.

  • செமி கண்டக்டர் - அடுத்த 5 ஆண்டுகளில் செமி கண்டக்ட் துறையில் முன்னேற 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன துறைக்கு எத்தனை கோடி முதலீடு
இடைக்கால பட்ஜெட்| சென்னைக்கு இத்தனை கோடியில் வளர்ச்சி திட்டங்களா..? நிதியமைச்சரின் நீண்ட பட்டியல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com