Emaya
EmayaHeartin

சினிமாவில் அறிமுகமாகும் தமிழ்நாடு அரசியல்வாதி மகள்! | Emaya | Heartin

ஆடிஷன் மூலம்தான் தேர்வு செய்தோம். முதலில் அவர் அமைச்சர் மகள் என்பதே எங்களுக்குத் தெரியாது, தேர்விற்கு பிறகுதான் விஷயமே தெரியும்.
Published on
Summary

தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா, 'ஹார்டின்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இமயா, சனந்த் மற்றும் மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கிஷோர் குமார் இமயாவை ஆடிஷன் மூலம் தேர்வு செய்தார், அவரின் திரைக்கதை பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசியலில் முக்கிய பிரமுகர் மற்றும் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. இன்று இடைக்கால பட்ஜெட்டை அவர் அறிவித்து அரசியலில் பரபரப்பாக இருக்க, அவரது வீட்டில் ஒருவர் கலைதுறையில் காலடி வைக்கிறார். அவரது மகள் இமயா தான் அது.

2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசுpt

அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் திரைப்படம் 'ஹார்டின்'. இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயா. இவர் இப்படம் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதுகுறித்து இயக்குநர் கிஷோர் குமார் "இமயாவை ஆடிஷன் மூலம்தான் தேர்வு செய்தோம். முதலில் அவர் அமைச்சர் மகள் என்பதே எங்களுக்குத் தெரியாது, தேர்விற்கு பிறகுதான் விஷயமே தெரியும். அவருக்கு  சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்திருக்கிறது. அதற்காக அவர் தன்னை தயார்படுத்தியிருக்கிறார்.

Emaya
"தனுஷ், ஆண்ட்ரியா படம் Interval வரை எடுத்த செல்வா.." ராம்ஜி சொன்ன ரகசியம் | Selvaraghavan | Dhanush

அவர் நடித்துள்ள சாதனா என்ற கேரக்டர் பேசப்படுவதாக இருக்கும். இமயா திரைக்கதை நுட்பங்களைப் பாடமாக எடுத்து நியூயார்க்கில் படித்துவிட்டு வந்திருக்கிறார். அதனால் இதன் திரைக்கதையில் அவருடைய பங்களிப்பும் இருக்கிறது. அவரே நடிக்கவும் செய்வதால் கேரக்டரை முழுமையாக உணர்ந்து நடித்துள்ளார். இந்த படம் இரண்டு பெண்களின் பார்வையில் சொல்லப்படும் கதையை கொண்டது" என்றார். 'ஹார்ட்டின்' படம் கோடை விடுமுறையில் வெளியா உள்ளது.

Emaya
இடைக்கால பட்ஜெட்| சென்னைக்கு இத்தனை கோடியில் வளர்ச்சி திட்டங்களா..? நிதியமைச்சரின் நீண்ட பட்டியல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com