மூளைச்சாவு அடைந்த கணவன்.. உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தார்.. மாவட்ட ஆட்சியர் நேரில் அஞ்சலி!

நாமக்கல் அருகே உடல் உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சியர் ஆறுதல் தெரிவித்தார்.
ராஜ்குமார்
ராஜ்குமார்புதியதலைமுறை

நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தவர் ராஜ்குமார் (41). இவர் கடந்த 26ம் தேதி மாலை வையப்பமலையிலிருந்து வேலகவுண்டம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சின்னமணலி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக அவரது இருசக்கர வாகனத்தின் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ராஜ்குமார் மூளை சாவு அடைந்தார். பெரும் சோகத்திலும் ராஜ்குமாரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது மனைவி மற்றும் குடும்பத்தார் முன்வந்தனர்.

ராஜ்குமார்
சிதைந்ததா கேப்டன் கனவு.. மும்பை இந்தியன்ஸை Unfollow செய்தாரா பும்ரா? - பின்னணி என்ன?

இதனை தொடர்ந்து, அவரது உடல் உறுப்புகள் சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் தானம் செய்யப்பட்டது. இந்நிலையில் ராஜ்குமாரின் உடல் இன்று அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

ராஜ்குமாரின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் உமா, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.

ராஜ்குமார்
“தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை” - மியாட் மருத்துவமனை அறிக்கை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com