சோனியா காந்தி to கனிமொழி.. சென்னையில் பெண் தலைவர்களின் பேச்சால் அதிர்ந்த திமுக மகளிர் உரிமை மாநாடு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், இன்று (அக்.14) திமுக மகளிர் அணி சார்பில், மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது.
மகளிர் உரிமை மாநாடு
மகளிர் உரிமை மாநாடுட்விட்டர்

திமுக மகளிர் அணி சார்பில், மகளிர் உரிமை மாநாடு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில், இன்று (அக்.14) திமுக மகளிர் அணி சார்பில், மகளிர் உரிமை மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், I-N-D-I-A கூட்டணியை சேர்ந்த முன்னணி பெண் தலைவர்கள் பங்கேற்றனர்.

தேசிய பெண் தலைவர்கள் பங்கேற்பு

குறிப்பாக, இந்த மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி, ஐக்கிய ஜனதாதள தேசிய நிர்வாக குழு உறுப்பினரும் பீகார் மாநில அமைச்சருமான லெஷிசிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆனிராஜா, ஆம் ஆத்மி கட்சி தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் ராக்கி பிட்லன், திரிணாமுல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுஷ்மிதா தேவ், சமாஜ்வாடி எம்.பி. டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

மகளிர் உரிமை மாநாடு
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாடு 33% மகளிர் இட ஒதுக்கீடு குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட வாய்ப்பு

“ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டிய நிலை வரும்” - மு.க.ஸ்டாலின்

இம்மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டிய நிலை வரும். தமிழ்நாட்டில் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டிய நிலை வரும் என நினைக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ளாட்சியில் 50% மேல் இடஒதுக்கீடு உள்ளதால் ஆண்களுக்கு இடஒதுக்கீடு கேட்கவேண்டிய நிலைவரும். நாடாளுமன்றத்தில் கனிமொழி பேசியபோது தலைவராக மட்டுமல்ல, அண்ணனாகப் பெருமைப்படுகிறேன்.

சென்னை சங்கமம் நடத்திக் காட்டிய கனிமொழி. இப்போது இந்திய சங்கமத்தை நடத்திக் காட்டியுள்ளார். பாஜகவை தோற்கடிக்க வேண்டியது இந்தியாவிலுள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளின் கடமை. பாஜக ஆட்சியில் மகளிர் உரிமை மட்டும் இன்றி அனைத்து மக்களின் உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி தேர்தல் கூட்டணி இல்லை. எந்த நிலையிலும் சமூக நீதியைவிட்டு தரக்கூடாது” என்றார்.

இதையும் படிக்க: நீடிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்.. கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் வருமா? இந்திய வர்த்தம் பாதிக்குமா?

”தமிழ்நாட்டில்தான் 11 பெண் மேயர்கள் உள்ளனர்” - கனிமொழி

தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. முன்னிலை வகித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு காவல்துறையில் இடமளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில்தான் 11 பெண் மேயர்கள் உள்ளனர். மகளிர் முன்னேற்றத்திற்காக உரிமைத்தொகை வழங்கப்படுகிறது; இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

இந்தியாவில் முதன்முறையாக காவல்துறையில் தமிழகத்தில்தான் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது; படிக்கும் ஆர்வமுள்ள பெண்களுக்கு கைதூக்கிவிட நிதி தந்து உதவுகிறது திமுக அரசு. ஒடுக்கப்பட்ட சமூக பெண் என்பதால் குடியரசு தலைவரும் அவமதிக்கப்படுகிறார். மணிப்பூரில் பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் கொடுமைகள் நடந்துள்ளன. மேலும் டெல்லியில் போராடிய விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த மத்திய பாஜக ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை” என்றார்.

இதையும் படிக்க: “24 மணிநேரத்தில் எப்படி 11 லட்சம் பேர் வெளியேற முடியும்?” - இஸ்ரேல் அரசுக்கு ஐ.நா கேள்வி

”இன்று இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் இருக்கிறார்கள்” - சோனியா காந்தி

விழாவில் சிறப்புரையாற்றிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, “நம்முடைய பெண்கள் இந்தியாவில் மகத்தான சாதனைகளைச் செய்திருக்கிறார்கள். மரபுவழி சமூகம், ஆணாதிக்க சமூகம், கலாசாரம் என்கிற களைகளை எல்லாம் தாண்டி மிக அருமையான சாதனைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்த நீண்டநெடிய போராட்டத்தில் ஏற்றங்களும் இறக்கங்களும் இருந்துள்ளன.

ஆனால் இன்று இந்திய பெண்கள் பல்வேறு துறைகளில் இருக்கிறார்கள். விஞ்ஞானத்திலே, அறிவிலே, ஆற்றலிலே, கலாசாரத்திலே, விளையாட்டிலே... எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய குடும்பத்தினுடைய மைய தூண்களாக, நாட்டினுடைய தலைவர்களாக ஆற்றுகிற பணிகள் மகத்தானவை. இந்த போராட்டத்தில் நீண்டதூரம் பயணிக்க வேண்டும். இன்னும் பல்வேறு தடைகளைத் தாண்ட வேண்டும்” எனப் பேசினார்.

இதையும் படிக்க: ”நாமே விருந்தினர்களை கிண்டல் செய்யலாமா?” - ’Make My Trip’ வெளியிட்ட வெறுப்பு பிரசார விளம்பரம்

”மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும்” - பிரியங்கா காந்தி

விழாவில் பேசிய காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ”நீங்கள்தான் என் தாய், நீங்கள்தான் என் சகோதரி. இங்கே இருப்பதை நான் பெருமையாகக் கருதுகிறேன். இதற்குமுன் நான் தமிழ்நாட்டிற்கு 30 வருடத்திற்கு முன்பாக எனது அப்பாவின் உடலை பெற வந்தேன். அப்போது எனது அம்மாவிற்கு நான் இப்போது இருக்கும் வயதைவிடக் குறைவு. ’பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகத்தை தந்தை பெரியார் எழுதினார். சமூக மாற்றத்திற்கான புரட்சி இங்கேதான் உருவானது.

ஆனால் நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் பெண் ஏன் இன்னும் அடிமையாக இருக்கிறாள் என்றே கேள்வி கேட்கும் நிலை உள்ளது. நாம் முழுமையான சமத்துவத்தை பெற இன்னும் உழைத்தாக வேண்டும். மாற்றத்திற்கான சரியான தளத்தில் இப்போது நாம் எல்லோரும் இங்கு நின்றுகொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் பெண் உரிமைக்காக பெரியார் அமைத்த அடித்தளத்தில் அண்ணாவும், கலைஞரும் செயல்பட்டார்கள். இந்திய பெண்கள் இனியும் நேரத்தை வீணாக்க முடியாது, மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும்” என உரையாற்றினார்.

இதையும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் போட்டி: களமிறக்கப்பட்ட ஷுப்மன் கில்.. முதல் விக்கெட்டை சாய்த்தார் முகமது சிராஜ்

”தமிழ்மொழிக்கும் மராத்திய மொழிக்கும் ஒற்றுமைகள் உண்டு” - சுப்ரியா சுலே

தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, ”ஜாதி, மத வேற்றுமைகள் இன்றி மொழி மீது பற்றுக்கொண்டு தமிழ்நாடு இருப்பது பெருமையாக உள்ளது. தந்தை பெரியாரின் சுயமரியாதை மாநாட்டின் வழியில் இந்த மாநாடு நடைபெறுவது மகிழ்ச்சி வழங்குகிறது.

மகளிர் இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவந்தபோது, நாடாளுமன்றத்தில் பாஜகவின் 300 ஆண்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டின் பெண்களின் உரிமைக்காக கனிமொழி போராடி பேசினார்.‌ எனது தங்கை தமிழ்நாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர் தமிழ்நாட்டின் வழக்கம்படி தாலி அணிகிறார். தமிழ்மொழிக்கும் மராத்திய மொழிக்கும் ஒற்றுமைகள் உண்டு” எனப் பேசினார்.

இதையும் படிக்க: ஐடி நிறுவனங்களில் தொடர்ந்து பணி நீக்கம்: இதர ஊழியர்களுக்கும் சலுகைகள் நிறுத்தம்!

”ஒன்றை வலுப்படுத்துவதன் மூலம் ஒன்றை பலவீனப்படுத்த முடியாது” - சுபாஷினி அலி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் சுபாஷினி அலி, “சமூக மற்றும் பாலின ஒடுக்குமுறைக்குப் பின்னால் இருக்கும் மனுதர்மத்தின் வேர்களும் நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ பொருளாதார சுரண்டல் அமைப்புகளும் பின்னிப்பிணைந்துள்ளதையும் அவை ஒன்றையொன்று வலுப்படுத்துவதையும் நாம் மறுக்க முடியாது. இவற்றில் ஒன்றை நீங்கள் பலப்படுத்தினால் இன்னொன்றும் பலப்படுகிறது. ஒன்றை வலுப்படுத்துவதன் மூலம் ஒன்றை பலவீனப்படுத்த முடியாது.

அனைத்து வகையான சுரண்டல்களின் கொடூரமான வளர்ச்சியை நமது அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்காத ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டத்தோடு செயல்படும் பாஜக அரசின்கீழ் இன்று நாம் கண்கூடாகக் காண்கிறோம். மனுஸ்மிருதியை இந்த நாட்டின் சட்ட மற்றும் சமூக கட்டமைப்பாக ஆக்குவதில் அவர்கள் எப்போதும் உறுதியாக உள்ளனர்.

”மனுவாதமே செயல்படுத்தப்படுவதற்கு சாட்சிகள்”

அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே மனுவாத நீதி நடைமுறைப்படுத்தப்பட்டு, குற்றவாளிகளின் சாதி அல்லது மதம் அடிப்படையில் தண்டனை வழங்கப்படுகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் பில்கிஸ் பானு வழக்கில் கூடுப்பாலியல் வன்கொடுமை செய்தவர்களும் படுகொலை செய்தவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார்கள் கொடுத்தும், தொடர் போராட்டங்கள் நடத்தியும்கூட குற்றவாளிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் அமர்ந்திருக்கின்றனர். ஹத்ராஸ் உ.பி.யில் பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை செய்த உயர் சாதியைச் சேர்ந்த 4 பேரில் 3 பேர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். ஆனால், மணிப்பூரில் மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டித்தனமான வன்முறையால் பாதிக்கப்பட்ட பழங்குடிப் பெண்களின் நீதிக்கான கூக்குரல்கள் 5 மாதங்களுக்குப் பிறகும் செவிமடுக்கப்படவில்லை. இதெல்லாம் அரசமைப்பு சட்டம் இருந்தும் மனுவாதமே செயல்படுத்தப்படுவதற்கு சாட்சிகள்.

இதையும் படிக்க: இந்தியா-பாக் போட்டி: Mr.Bean ஸ்டைலில் ரிஸ்வானை கலாய்த்த விராட் கோலி! வைரலாகும் வீடியோ!

”மாற்றத்துக்கான காற்று நம்மை நோக்கி வீசத் தொடங்கியுள்ளது”

பெண்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில், பிஜேபி அரசு மகளிர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை இயற்றியிருக்கிறது. ஆனால் அந்த சட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதை காலவரையின்றி ஒத்திவைக்கும்படியான நிபந்தனைகளை சேர்த்திருக்கிறார்கள்.இது நமது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திமுக போன்றவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் அடியாகும்.

நாம் பெண்களின் இட ஒதுக்கீட்டுக்காக 27 ஆண்டுகளாக ஒன்றிணைந்து போராடி வருகிறோம். ஆனால் இப்போது நாட்டின் முக்கியமான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் தந்திரமாக இந்த சட்டம் இயற்றப்பட்டு... பெண்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தால் நாம் ஏமாற்றப்பட்டுள்ளோம். இப்படிப்பட்ட இந்த நிலையிலேதான்... இப்போது மாற்றத்துக்கான காற்று நம்மை நோக்கி வீசத் தொடங்கியிருப்பதை நாம் உணர்கிறோம்.

இதையும் படிக்க: அசைக்க முடியாத வரலாறு..பாகிஸ்தானை 8வது முறையும் சாய்த்த இந்திய அணி-ஒரே போட்டியில் நிகழ்ந்த சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com