இந்தியா-பாக் போட்டி: Mr.Bean ஸ்டைலில் ரிஸ்வானை கலாய்த்த விராட் கோலி! வைரலாகும் வீடியோ!

இந்தியாவிற்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான் அணி.
virat - rizwan
virat - rizwanTwitter

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. 1,20,000 இருக்கைகள் கொண்ட மிகப்பெரிய நரேந்திர மோடி மைதானத்தில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரசிகர்கள் இந்தப் போட்டியை காண குவிந்துள்ளனர்.

மிகப்பெரிய போட்டியில் டாஸ் வென்ற ரோகித் சர்மா பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்யுமாறு அழைத்தார். பாகிஸ்தானின் டாப் ஆர்டர் வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அமைத்தாலும், அதற்கு பிறகு கம்பேக் செய்த இந்திய பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

பாபர் - சிராஜ்
பாபர் - சிராஜ்

பின்னர் ஜோடி சேர்ந்த பாகிஸ்தானின் ப்ரைம் ஜோடிகளான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் ஆட்டத்தை சிறப்பாக எடுத்துச்சென்றனர். ஒரு கட்டத்தில் இவர்கள் பாகிஸ்தானை 300 ரன்களுக்கு எடுத்துச்செல்வார்கள் என்று நினைத்த போது, பாபரை 50 ரன்னிலும், ரிஸ்வானை 49 ரன்னிலும் வெளியேற்றிய இந்தியா ஆட்டத்தில் கம்பேக் செய்தது. அதற்கு பிறகு இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ind vs pak
ind vs pak

192 ரன்களை இலக்காக கொண்டு விளையாடிய இந்திய அணி 32.3 ஓவர்களி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு ஆட்டத்தை முடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 6 பவுண்டரிகள், 6 சிக்சர்களை பறக்கவிட்டு 86 ரன்கள் அடித்தார் கேப்டன் ரோகித் சர்மா. ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள், கே.எல்.ராகுல் 19 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சுப்மன் கில், விராட் கோலி தலா 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்

முகமது ரிஸ்வானை Mr Bean போல கலாய்த்த கோலி!

பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸின் போது முகமது ரிஸ்வானை, Mr Been-ன் டிரேட் மார்க் ஸ்டைலில் விராட் கோலி கலாய்த்தது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Rizwan
Rizwan

பாகிஸ்தான் 73 ரன்கள் இருந்தபோது இமாமை ஹர்திக்பாண்டியா அவுட்டாக்கி வெளியேற்ற, 4வது வீரராக பேட்டிங் செய்யவந்தார் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான். இமாம் கிட்டத்தட்ட எல்லைக்கோட்டை தாண்டியபிறகுதான் ரிஸ்வான் மைதானத்திற்குள் நடக்கவே தொடங்கினார். மெதுவாக நடந்துவந்து களத்திற்கு வந்த அவர், உடனே விளையாட தொடங்கிவிடுவார் என நினைத்த ஹர்திக் பாண்டியா பந்துவீச தனது மார்க்கை நிலைநிறுத்தி காத்துக்கொண்டிருந்தார். ஆனால் உடனே ஆட்டத்தை தொடங்காத ரிஸ்வான், அப்போது தான் க்ரீஸை சரிபார்த்து லெக்பேடை சரிசெய்துகொண்டிருந்தார். சரி அதற்கு பிறகாவது தொடங்கிவிடுவார் என்று பார்த்தால் கைகிளவ்ஸை கழற்றி போட ஆரம்பித்தார்.

இந்நிலையில், இதை பார்த்துக்கொண்டிருந்த விராட் கோலி Mr Bean-ன் டிரேட் மார்க் ஸ்டைலில் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார். “கையில் வாட்ச் இருப்பது போல் ஒரு பாவனை செய்த விராட், தாமதம் ஆவதால் வாட்ச்சை பார்த்துவிட்டு ரிஸ்வானை பார்ப்பது போல் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். பிறகு அவர் செய்ததை நோட் செய்து எழுதிவைத்துக்கொண்டதுபோல் அந்த சைகைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்”.

இது மிஸ்டர் பீனின் விரும்பத்தக்க டிரேட்மார்க் ஸ்டைலாகும். பீனின் அந்த ரியாக்சனுக்கு இல்லாத ரசிகர்களே இல்லை. தற்போது ரசிகர்கள் விராட் கோலி கலாய்த்ததை அதிகமாக பகிர்ந்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com