”நாமே விருந்தினர்களை கிண்டல் செய்யலாமா?” - ’Make My Trip’ வெளியிட்ட வெறுப்பு பிரசார விளம்பரம்

இந்திய - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியை கருத்தில்கொண்டு மேக்மைட்ரிப் (Make My Trip) நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையாகி இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் - விளம்பரம்
இந்தியா, பாகிஸ்தான் - விளம்பரம்ட்விட்டர்

உலகக்கோப்பை: பாகிஸ்தான் - இந்தியா மோதல்

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. அதிலும், உலகக்கோப்பை என்றால் சொல்லவே வேண்டாம். இந்த நிலையில், 13வது ஆடவர் உலகக்கோப்பை திருவிழா, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் நிலையில், இன்று (அக்.14) பாகிஸ்தான் - இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையேயான 12வது லீக் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தியா, பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான்ட்விட்டர்

சர்ச்சையை ஏற்படுத்திய விளம்பரம்

இதை, ஆவலுடன் ரசிகர்கள் கண்டுகளித்து வரும் நிலையில், இந்திய - பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியை கருத்தில்கொண்டு மேக்மைட்ரிப் (Make My Trip) நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையாகி இருக்கிறது. மேலும், இந்தப் போட்டியை காண இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் இவ்விளம்பரத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், அவர்களை முகம் சுளிக்கவும் வைத்திருக்கிறது.

இதையும் படிக்க: இந்தியா - பாகிஸ்தான் போட்டி: களமிறக்கப்பட்ட ஷுப்மன் கில்.. முதல் விக்கெட்டை சாய்த்தார் முகமது சிராஜ்

விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்து என்ன?

மேக்மைட்ரிப் வெளியிட்ட விளம்பர பதிவில், ’பாகிஸ்தான் அணி தோல்வியுற்றால், பயனர்கள் கீழ்க்கண்ட வார்த்தைகளைத் தெரிவித்து மேக்மைட்ரிப் சேவையில் அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி பெறலாம்’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

விளம்பரம்
விளம்பரம்ட்விட்டர்

அதன்படி, ’பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் அல்லது 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 50 சதவீதமும், 6 விக்கெட்டுகள் அல்லது 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 30 சதவீதமும், 3 விக்கெட்டுகள் அல்லது 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 10 சதவீதமும் தள்ளுபடி பெறலாம்’ என அந்த விளம்பர நிறுவனம் தெரிவித்திருந்தது. இத்துடன் ரசிகர்கள், BoysPlayedWell, EkShaheenHaar அல்லது NoMaukaMauka போன்ற குறியீடுகளை பயன்படுத்தலாம் என்று மேக்மைட்ரிப் தெரிவித்து இருந்தது.

இதையும் படிக்க: ஆட்கள் பற்றாக்குறை.. பாட்டு பாடியபடி டெல்டா பகுதிகளில் நாற்று நடவு செய்யும் வடமாநிலத் தொழிலாளர்கள்!

விளம்பரத்திற்கு எதிராகக் கருத்துகள்!

இதுதொடர்பான பதிவு வெளியான சில மணி நேரங்களில், அதிக வைரல் ஆனது. பலர், இத்தகைய விளம்பரம் வெளியிட்ட நிறுவனத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டனர். சிலர், ’நாம்தான் போட்டியை நடத்துகிறோம், நாமே விருந்தினர்களை கிண்டல் செய்யக்கூடாது’ என்ற வகையில் கருத்து பதிவிட்டனர். மேலும் சிலர், ’இது உண்மையான கிரிக்கெட்க்கு அர்த்தம் கிடையாது’ என்று பதிவிட்டனர். அதேநேரத்தில், இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ’அன்பு மற்றும் காதலில் கிடைக்காத சந்தோஷம், பாகிஸ்தான் தோற்றால் கிடைத்துவிடுகிறது. இப்படி யார் அழைப்பார்கள். இது மேக்மைட்ரிப்-இன் சரியான விளையாட்டு’ எனத் தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ
பிசிசிஐ

இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு கலைநிகழ்ச்சி ஏற்பாடு

முன்னதாக, உலகக்கோப்பையின் முதல் போட்டிக்கு (அக். 5ஆம் தேதி நடைபெற்ற இங்கிலாந்து - நியூசிலாந்து) எந்த நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யாத பிசிசிஐ, தொடரின் 12வது லீக் போட்டியான இன்று நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தது விமர்சனத்துக்குள்ளானது. இந்தியா-பாகிஸ்தான் போட்டியை சிறப்பிக்கும் வகையில் சிறப்பு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது, பி.சி.சி.ஐ. மேலும் அகமதாபாத்திற்கு வந்த பாகிஸ்தான் அணியை வரவேற்கும் விதமாக கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருந்தது பிசிசிஐ.

இந்தியா, பாகிஸ்தான் - விளம்பரம்
“எதற்காக இவ்வளவு சிறப்பு கவனிப்பு?.. IND-PAK போட்டியை புறக்கணிக்கிறோம்” - அதிருப்தியில் ரசிகர்கள்!

அதிருப்தியை வெளிப்படுத்தும் பாகிஸ்தான் ரசிகர்கள்!

இத்தகைய செயலை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள், “ஒரு உலகக்கோப்பையை தொடர் என்பது அனைத்து உலக நாடுகளும் பங்கேற்று விளையாடுவது. இந்தியா-பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கு மட்டும் நடைபெறுவது அல்ல. அவர்கள் அனைவரும் உலகத்தரம் வாய்ந்த அணிகள், அவர்களுக்கான மரியாதை செய்யப்படாமல் ஒரு லீக் போட்டிக்கு இப்படி செய்வது மன்னிக்க முடியாத ஒன்றாகும்” என அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

ட்விட்டர்

அதேநேரத்தில், Make My Trip நிறுவனம் வெளியிட்டிருக்கும் இந்த வெறுப்பு பிரசார விளம்பரம் பாகிஸ்தான் ரசிகர்களை மிகுந்த கவலையடையச் செய்திருக்கிறது.

இதையும் படிக்க: காஸாவில் குளியல், கழிப்பறைகளைச் சுட்டுத் தள்ளிய ஹமாஸ் அமைப்பினர்.. வைரல் வீடியோ

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com