தஞ்சை பெரிய கோவிலுக்கு போறீங்களா? இந்த Dress-க்கு எல்லாம் No! இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு பலகை

உலக பிரசித்திபெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தஞ்சை பெரிய கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் ஆடை கட்டுப்பாடு குறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
tanjore temple
tanjore templept

தமிழர்களின் சிறந்த கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுதான் தஞ்சாவூர் பெரிய கோவில். இந்த கோவிலுக்கு, தின்சரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கான ஆடை கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அந்த பலகையில், ஆண்கள் வேஷ்டி, சட்டை மற்றும் பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வரலாம். பெண்கள் புடவை, தாவணி துப்பட்டவுடன் கூடிய சுடிதார் போன்றவற்றை அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

tanjore temple
தஞ்சை பெரிய கோயில் சித்திரை தேரோட்டம்: சிவ கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்து வரும் பக்தர்கள்

அதே நேரத்தில் நைட்டி, ட்ரௌசர் போன்ற உடைகளை பெண்கள் அணிந்து வரக்கூடாது. ஆண்களும் ட்ரௌசர், டீ சர்ட் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது என்று அறிவிப்பு பலகையில் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன.

இந்து சமயத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பு பலகை கோவிலின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

tanjore temple
ஸ்கெட்ச் போட்டு ரவுண்டப்!பாலினம் கண்டறியும் கருவியுடன் சிக்கிய 10ம் வகுப்பு வரை படித்த ’பலே டாக்டர்’

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com