தவெக இளைஞர்கள் வாக்குறுதிகள்
தவெக இளைஞர்கள் வாக்குறுதிகள்web

’PhD வரை படிக்க பிணையில்லா கடன்..’ கவனம் ஈர்க்கும் விஜய்யின் இளைஞர்களுக்கான 10 வாக்குறுதிகள்!

2026 சட்டமன்ற தேர்தலுக்கான மகளிர் தேர்தல் வாக்குறுதிகளை தவெக முதற்கட்டமாக அறிவித்த நிலையில், தற்போது தமிழக யூத்களுக்கான முக்கிய வாக்குறுதி அறிவிப்புகளை விஜய் அறிவித்துள்ளார்.
Published on
Summary

தமிழக அரசியலில் 5 முனை போட்டி சூழலில், தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுவதோடு, இளைஞர்களை குறிவைத்து 10 வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். கவனம் பெறும் இத்திட்டங்கள் மூலம் இளைஞர் வாக்குகளை ஈர்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், திமுக, அதிமுக, தவெக, நாதக, சசிகலா-ராமதாஸ் தரப்பு என 5 முனை போட்டி நிலவுகிறது. நாளை தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டுவருகின்றன.

தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு
தவெக வேட்பாளர்கள் அறிவிப்பு

அந்தவகையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வேட்பாளர் அறிமுக விழாவில் இரண்டாம் கட்டமாக தமிழக யூத்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தார்.

தவெக இளைஞர்கள் வாக்குறுதிகள்
முதல்வருக்கு எதிராக நிற்கும் தவெக வேட்பாளர் யார்..? சென்னை வேட்பாளர்கள் பட்டியல்!

யூத்-களுக்கான 10 தேர்தல் வாக்குறுதிகள்..

வேட்பாளர்கள் அறிவிப்பு நிகழ்வில் பேசிய விஜய், முதற்கட்டமாக மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது போல, தமிழக யூத்களுக்கான வாக்குறுதிகளை இரண்டாம் கட்டமாக அறிவிப்பதாக தெரிவித்தார்.

10 அறிவிப்புகளை வெளியிட்ட விஜய்,

1. போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு - போதைப்பொருள் உள்வரவு மற்றும் புழக்கத்திற்கு கடுமையான சட்டங்கள், பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு மன்றம்

2. கல்வி உத்தரவாத திட்டம் - கல்விக்கு வறுமை தடையாக இருக்கக்கூடாது. அதனால் 12ஆம் வகுப்பு முதல் பிஹெச் டி வரை படிக்க ரூ.20 லட்சம் வரையிலான பிணையில்லா கடன்.

3. அரசு வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு கால அட்டவணை - அரசு வேலைகளில் இளைஞர்களின் பணி வாய்ப்பை உறுதிசெய்ய நடவடிக்கை

4. வேலைவாய்ப்பு தாமத சூழல் நிதியுதவி - 29 வயதிற்கு மேலும் வேலை கிடைக்கவில்லை என்றால் மாதந்தோரும் டிகிரி படித்தவர்களுக்கு 4000 ரூபாய், டிப்ளமோ படித்தவர்களுக்கு 2000 ரூபாய் இளைஞர் நல நிதியாக வழங்கப்படும்

தவெக இளைஞர்கள் வாக்குறுதிகள்
2 இடங்களில் போட்டி ஏன்..? விஜய் போடும் தேர்தல் வியூகம்! தொகுதிகளின் கள நிலவரம் என்ன..?
விஜய்
விஜய்

5. வெற்றித் தொழிற் பயிற்சி - ஆண்டுதோறும் 5 லட்சம் இண்டர்ன் பணிகளை வழங்க அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கூட்டாக இயங்கும். இதில் பட்டதாரிகளுக்கு மாதம் 10000 ரூபாயும் ஐ.டி படித்தவர்களுக்கு 8000 ரூபாய் சம்பளமாக அரசே வழங்கும்.

6. வெற்றித் தொழில் முனைவோர் திட்டம் - இளைஞர்களை வேலை வழங்குபவர்களாக மாற்றும் திட்டமாக இது இருக்கும், தொழில் முனைவோர்களை உருவாக்கும் வகையில் 25 லட்சம் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்.

7. நமது ஊரில் நமக்கே வேலைவாய்ப்பு - தமிழகத்தில் வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கே முன்னுரிமை. தனியார் நிறுவனங்களில் 75% தமிழர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு மாநில ஜி.எஸ்.டியிம் 2.5% மானியம் வழங்கப்படும். மின் கட்டணங்களில் 5% மானியம் வழங்கப்படும். TNPSC, TRB, TNEB-க்களில் காலதாமதம் இல்லாமல் போட்டி தேர்வுகள் நடத்தப்படும்.

8. இளைஞர் பங்களிப்பில் நல்லாட்சி - கிராமப்பஞ்சாயத்து, நகர உள்ளாட்சி அமைப்புகளில் முதல்வர் மக்கள் சேவை நண்பர் என்ற புதிய பதவி உருவாக்கப்படும், அதன்மூலம் அவர்கள் வசிப்பிடங்களின் சுற்றத்திலேயே வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யப்படும். அவர்களுக்கு மாதம் 18ஆயிரம் ஊதியம் வழங்கப்படும்.

9. தமிழ்நாடு இளைஞர் ஆலோசனை குழு - இளைஞர்களை நேரடியாக பாதிக்கும் பிரச்னை குறித்து தெரிவிக்கும் தளமாக அது அமையும். இந்த முயற்சியை முன்னெடுக்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்.

10. படைப்பாளி தொழில் முனைவோர் திட்டம் - தமிழ்நாட்டின் பாரம்பரியம் கலாசாரத்தை உலகளவில் பரப்ப 500 நவீன படைப்பாளி பள்ளிகள் அமைக்கப்படும்.

முதலிய 10 வாக்குறுதிகளை இளைஞர்களுக்கானதாக அறிவித்துள்ளார். இது பெரிதும் கவனம் பெறும் திட்டமாக பார்க்கப்படுகிறது..

தவெக இளைஞர்கள் வாக்குறுதிகள்
ஒரே ஆள் ஜெயலலிதா.. 2வது விஜய் மட்டுமே.. தமிழக அரசியலில் அரிதான நிகழ்வு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com